ஐ.நா., கூட்டத்தில் ரஷ்யாவை குற்றஞ்சாட்டும் அமெரிக்காவின் எஃப் .பி.ஐ.,

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021
Share
Advertisement
நியூயார்க்: சைபர் செக்யூரிட்டி எனப்படும் இணைய பாதுகாப்பு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஓர் முக்கியக் கூட்டத்தை நடத்தியது. காலாகாலமாக ரஷ்யா அமெரிக்க அரசின் ரகசியங்களை தங்களது ஹேக்கர்கள் மூலமாக அமெரிக்க அரசு கணினிகளில் இருந்து திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காலம்முதலே இந்த குற்றச்சாட்டு ரஷ்யாமீது

நியூயார்க்: சைபர் செக்யூரிட்டி எனப்படும் இணைய பாதுகாப்பு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஓர் முக்கியக் கூட்டத்தை நடத்தியது. காலாகாலமாக ரஷ்யா அமெரிக்க அரசின் ரகசியங்களை தங்களது ஹேக்கர்கள் மூலமாக அமெரிக்க அரசு கணினிகளில் இருந்து திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.



latest tamil news



முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காலம்முதலே இந்த குற்றச்சாட்டு ரஷ்யாமீது முன் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாமீது குற்றம் சாட்டியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் எதிரி நாட்டு கணினி ரகசியங்களை ஹேக்கர்கள்கொண்டு திருடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது.
இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒரு நாட்டின் கணினி தகவல் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது என்பதால் அதனை பாதுகாப்பதில் அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹேக்கர்கள் மூலமாக எதிரி நாட்டின் தகவல்களைத் திருடுவது குற்றம் எனவும் ஐநா கூறியது.
அமெரிக்க மின்சாரத் துறை முதல் தண்ணீர் பங்கீட்டுத்துறைவரை அனைத்து துறைகளின் மின்னணுத் தகவல்களும் ரஷ்யாவால் திருடப்பட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அமெரிக்காவின் பிரபல தனியார் நிறுவனங்களான சோலார்விண்ட்ஸ், தி கொலோனியல் ஆயில் பைப்லைன் உள்ளிட்ட நிறுவனங்களின் கணினியில் வைரஸ் தாக்குதல் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.


latest tamil news



ரஷ்யா தனது ஹேக்கர்கள் மூலமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க இதுபோன்ற தனியார் நிறுவன கணினிகளில் ரேன்சம்வேர் எனப்படும் வைரஸ்களை உலவ விடுகின்றனர். இவ்வாறு அமெரிக்க உளவுத்துறையான எஃப்பிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X