கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'நீட்' விசாரிப்பு குழு அமைப்பு : உயர் நீதிமன்றம் விசாரணை!

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு நியமித்துள்ள குழு பற்றி விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் பெறப்பட்டதா என, கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனு:மருத்துவ படிப்பில் மாணவர்கள்
 'நீட்' விசாரிப்பு குழு, அமைப்பு ,உயர் நீதிமன்றம் விசாரணை!

சென்னை : 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு நியமித்துள்ள குழு பற்றி விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் பெறப்பட்டதா என, கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனு:மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.இதற்கான அரசாணை ஜூன் 10ல் பிறப்பிக்கப்பட்டது. தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த, இந்த சட்டம் வழிவகுக்கிறது.


வீண்செலவுமருத்துவ ஆலோசனை கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கமிஷனும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தேசிய மருத்துவ கமிஷன் முன், மருத்துவ கல்வி குறித்த எந்த பரிந்துரையையும் அளிக்கலாம். மருத்துவ ஆலோசனை கவுன்சில் வாயிலாக, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கருத்து தெரிவிக்கலாம்.இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது. சட்டப்படி இது அனுமதிக்கத்தக்கது அல்ல; இந்தக் குழு அமைப்பதால் வீண் செலவு தான் ஏற்படும். பல்வேறு ஆய்வுகள், நீதிமன்ற உத்தரவுகள் வாயிலாகவே, பொது நுழைவு தேர்வு வந்துள்ளது.

நீட் தேர்வு நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள், தேர்வுக்கு தயாராக ஆரம்பித்து விட்டனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீட்டை, அரசு வழங்கி உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நியமனம் தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசிடம் விளக்கம்?மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ''நீட் தேர்வு குறித்து 2017 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கை, நீட் தேர்வின்படியே நடக்க வேண்டும். ''மாநில அரசு அமைத்த குழு, வீணான நடவடிக்கை. நீட் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பதால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது'' என்றார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''தேர்தல் அறிக்கையில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.அப்போது நீதிபதிகள், 'உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது; குழு அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா' என, கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறினார்.


தள்ளிவைப்புஅதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தும், அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுவின் நகலை, உடனடியாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும், மத்திய அரசும் தன் நிலையை தெரிவிக்கலாம் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை ஜூலை 5க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
30-ஜூன்-202123:35:05 IST Report Abuse
Tamil தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் வருவாய் நிறுத்தினால் தான் சரிபட்டுவரும் வடஇந்தியர்கள் கொண்டு பணிசெய்யும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் ter குறைவாக quote செய்தலும் தவிர்த்து தமிழகத்தை சேர்ந்தோர் 80% வைத்து பனி செய்யும் நிறுவனத்தின் quote அதிகமாக இருந்தால் கூட அதற்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தம் விதிமுறைகளைமேற்கொள்ளபடவேண்டும் மத்தியஅரசு உச்சநீதிமன்றம் போன்றவரிடம் விளக்கம் அளிப்பதைவிட அதானி அம்பானியிடம் கமுக்கமாக பேசினால் வாயைமூடி கொண்டு செயல்படுத்துவார்கள்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30-ஜூன்-202116:33:43 IST Report Abuse
Svs Yaadum oore தமிழ் நாட்டில் தான் இந்தியாவிலே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்குதாம் ...வடகத்தியன் இங்கு வந்து படிச்சுருவானாம் ....இங்கிருந்து டெல்லிக்கு காமெர்ஸ் மாணவர் சென்று படிப்பதால் டெல்லி மாணவர்கள் இடம் பறிபோகிறதுன்னு கெஜ்ரிவால் சொன்னாரு ...அதுக்கு என்ன செய்யலாம் ??..வடகத்தியன் தான் இங்கே வந்து படிக்கறான்னு ஆதாரம் இருக்குதா ??....ஏன் லட்ச தீவுக்காரன் , மலையாளி வந்து படிக்கலயா ??..இங்குள்ள தமிழன் கட்டும் வரிப்பணத்தில் உருது , அரபி பேசும் லட்சத்தீவுக்காரன் இங்கே வந்து படித்தால் ஒன்னும் பிரச்சனை இல்லையா?? ...தமிழன் கட்டும் வரிப்பணத்தில் இங்கே உருது மொழி அரசு பள்ளி எதுக்கு ??..அதை மூட வேண்டியதுதானே ??
Rate this:
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
30-ஜூன்-202122:11:46 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் "" தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா:: பாரதம் என்றால் என்ன , ஹிந்துஸ்தான் என்றால் என்ன இந்தியா என்றால் எனா , உன் மூளையே மூளை , கூலிக்கு மாரடிக்கும் உனக்கு இவ்வளவு மூளை இருக்குதா என்ன , மூன்றும் ஒன்றுதான் , இல்லை இப்படி போடத்தான் உனக்கு betta என்பதல் கூலிக்கு மேலே கூவுகிரியோ , திருந்து...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
30-ஜூன்-202115:38:17 IST Report Abuse
Kumar எல்லா திராவிடர்களும் ஏற்றுக்கொண்ட நீட் தேர்வை ஏன் தமிழ் திராவிடர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை?. ஏன் ஏன்றால் தமிழர்கள் மூடர்கள் என்று ஏற்கனவே ஒரு திராவிடத் தலைவர் கூறியுள்ளார். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
blocked user - blocked,மயோட்
30-ஜூன்-202119:38:06 IST Report Abuse
blocked userஒரு திருத்தம்... காட்டுமிராண்டி மொழி பேசுகிறவன் மென்மையானவனாக இருக்க முடியாது... ஆகவே தமிழன் காட்டுமிராண்டி என்று சொல்லாமல்ச்சொன்னது ஈரோட்டு ஈர வெங்காயம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X