அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் வேலுமணி கோஷ்டி: களையெடுக்கிறார் ஸ்டாலின்

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சட்டசபை தேர்தலில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 50 தொகுதிகளில், 40 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் என, அக்கட்சி மேலிடம் நினைத்தது. ஆனால், 17 தொகுதிகளைத் தான் பெற்றது. இதனால், மிகவும், 'அப்செட்' ஆன, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, கட்சியின் சட்டத்துறை ஆலோசகரும், எம்.பி.,யுமான, என்.ஆர்.இளங்கோ
DMK, CM Stalin, Stalin, MK Stalin

சட்டசபை தேர்தலில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 50 தொகுதிகளில், 40 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் என, அக்கட்சி மேலிடம் நினைத்தது. ஆனால், 17 தொகுதிகளைத் தான் பெற்றது. இதனால், மிகவும், 'அப்செட்' ஆன, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, கட்சியின் சட்டத்துறை ஆலோசகரும், எம்.பி.,யுமான, என்.ஆர்.இளங்கோ தலைமையிலான குழுவை, கோவை மற்றும் மேற்கு மண்டலத்துக்கு அனுப்பினார்.அக்குழுவினர், நுாற்றுக்கணக்கானவர்களை சந்தித்து தகவல் திரட்டி, தலைமைக்கு அறிக்கை கொடுத்தனர்.


தகவல்இதையடுத்து, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராமனிடம் தோல்வி அடைந்த, வரதராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கோவை மாவட்ட கட்சி அமைப்பு, ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், இரு சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றன. கோவை தெற்கு மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகள் இடம் பெற்றன. இரு தொகுதிகளிலும் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்ற தென்றல் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொள்ளாச்சியில் போட்டியிட, 'சீட்' கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், மக்களிடையே பிரபலமான டாக்டர் வரதராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

கடந்த ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டதால், தி.மு.க.,வுக்கு வெற்றி நிச்சயம் என, கருதப்பட்டது. ஆனால், வரதராஜன் தோல்வி அடைந்தார். தன் தோல்விக்கு, கட்சியின் மாவட்ட தலைமையே காரணம் என, மேலிடத்தில் அவர் புகார் அளித்தார்; ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். இதற்கிடையில், கோவை தி.மு.க., நிர்வாகிகள் பலர், முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன், இன்றும் தொடர்பில் இருக்கின்றனர் என்ற தகவலும், கட்சி தலைமைக்கு சென்றது.


latest tamil news
உள்ளடி வேலைகோவை மாவட்ட பொறுப்பாளர்களான, சி.ஆர்.ராமச்சந்திரன், சேனாதிபதி, பையா கிருஷ்ணன் கவுண்டர் ஆகியோர், தொண்டர்களை மதிப்பதில்லை என்றும், புகார்கள் குவிந்தன. வேலுமணிக்கு நெருக்கமானவர்கள், கோவை மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புகளில், இன்றும் உள்ளனர். அதனால் தான், உள்ளடி வேலை நடந்து, கோவையில் கட்சி தோல்வி அடைந்தது என்றும், தொண்டர்கள் தரப்பில் கூறப்பட்டது.

வேலுமணி போட்டியிட்டது, தொண்டாமுத்துார் தொகுதி. இங்கு தேர்தலுக்கு முன், தி.மு.க., தரப்பில் ரகசிய கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தை முழுமையாக மொபைல் போனில், 'வீடியோ கால்' வாயிலாக, வேலுமணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். அதை வைத்து, வேலுமணி, எதிர் நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து விட்டார்.

கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும், இப்படி பல வகையிலும் வியூகம் வகுத்து வேலுமணி, தி.மு.க.,வை வீழ்த்தி விட்டார். கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோருக்கு, தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை; உள்ளடி வேலைகளும் நடந்தன. இதே நிலைமை தான், மேற்கு மண்டலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களின் நிலையும். கரூர் தவிர்த்த மற்ற மாவட்டங்களில், தி.மு.க., தோல்விக்கு காரணமான நிர்வாகிகளை மாற்ற, தலைமை ஆலோசித்து வருகிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.


மண்டல பொறுப்பாளர் உதயநிதி?தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது, மேற்கு மண்டலத்துக்கு கூடுதல் நாட்களை ஒதுக்கினார். அங்கு கட்சி தோல்வியை சந்தித்ததும், அவரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவரை மேற்கு மண்டல அமைப்பு செயலராக நியமித்து, சில காலம் அந்த பகுதியில் தங்கி, அமைப்பு ரீதியில் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னோடியாக தான், கடந்த வாரம், சென்னையில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், 'தேர்தல் தோல்விக்கு காரணமான, மாவட்ட செயலர்கள் விரைவில் மாற்றப்படுவர். கட்சிக்குத் தேவை வெற்றி. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை தலைமை செய்யும்' என்று, ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-ஜூன்-202117:38:03 IST Report Abuse
வெகுளி கொங்கு மக்கள் நாகரீகம் மிக்கவர்கள்... தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதியின் அநாகரீக ஆபாச தேர்தல் பிரசாரமே தோல்விக்கு காரணம்.... எனவே அப்பாவிகளை பலிகடா ஆக்காமல் ராசியில்லாத இந்த துணை நடிகரை பதவியை விட்டு தூக்குங்கள் ....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01-ஜூலை-202107:16:50 IST Report Abuse
meenakshisundaramஸ்டாலின் 'கலை 'எடுக்க அப்புறம் உதயநிதி 'நாத்து 'நடுவாராமா ?...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-ஜூன்-202113:14:37 IST Report Abuse
Vena Suna வேலுமணி வல்லவனுக்கு வல்லவன்...ஹஹஹ
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
30-ஜூன்-202111:57:29 IST Report Abuse
Dr. Suriya காங்கிரசு போல கோஷ்டி தலைவர்கள் உருவாகுவார்கள்....
Rate this:
30-ஜூன்-202113:13:45 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஹா ஹா சேலம் சிவகுமார் வந்து விட்டார் , இன்று லேகியம் என்று விற்பனை என்று தெரியல...
Rate this:
30-ஜூன்-202113:42:38 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்வருமான வரித்துறை வலையில் வேலுமணி. இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை அமலாக்கப் பிரிவும் கேட்டு வாங்கியிருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X