அரசியல் செய்தி

தமிழ்நாடு

தப்பு தப்பாக எழுதி சர்ச்சையில் சிக்கிய கதிர்

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
'இன்று நம் மாவட்ட செயலர் திரு நந்தகுமார் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் பொதுச் செயலர் அவர்களை மற்றும் எண்ணை சந்தித்து வாழ்த்து பெற்றார். நானும் அவருக்கு பட்டு வெட்டி அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்'இப்படி ஒரு தகவலுடன், தன் முகநுால் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் வேலுார் லோக்சபா தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த். மேலும், இரு படங்களையும் இணைத்திருக்கிறார். இப்படி,
Kathir Anand, DMK, H Raja, BJP, கதிர், கதிர் ஆனந்த், ராஜா

'இன்று நம் மாவட்ட செயலர் திரு நந்தகுமார் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் பொதுச் செயலர் அவர்களை மற்றும் எண்ணை சந்தித்து வாழ்த்து பெற்றார். நானும் அவருக்கு பட்டு வெட்டி அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்'

இப்படி ஒரு தகவலுடன், தன் முகநுால் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் வேலுார் லோக்சபா தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த். மேலும், இரு படங்களையும் இணைத்திருக்கிறார். இப்படி, தமிழில் தப்பும் தவறுமாக, 'டைப்' செய்து தகவல் வெளியிட்டிருக்கும் கதிர் ஆனந்தை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.


latest tamil news




இதை அப்படியே, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, 'நோ கமென்ட்' என, குறிப்பிட்டு, முகநுாலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இதுபற்றி, கதிர் ஆனந்த் கூறியதாவது:கட்சியின் மாவட்ட செயலர் நந்தகுமார், தன் பிறந்த நாளுக்கு, என்னையும், தந்தையையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். பதிலுக்கு பட்டு வேஷ்டி அணிவித்து மரியாதை செய்தேன்.

அதை படம் எடுத்து, என் முகநுாலில் ஒரு பதிவுக்காக, தகவலுடன் வெளியிட்டேன். தகவலை, ஆங்கில எழுத்து வாயிலாக தமிழில், 'டைப்' செய்தேன். வார்த்தைகளை படித்து பார்த்து, ஒற்றுப் பிழைகளை சரி செய்து, 'போஸ்ட்' செய்வதற்குள் தவறுதலாக கைபட்டு, 'போஸ்ட்' ஆகி விட்டது.

அதை மீண்டும் சரியாக, 'எடிட்' செய்து போஸ்ட் செய்வதற்குள், உலகமே பரவி, அதை வைத்து கதிர் ஆனந்தின் தமிழ் புலமை என்று குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர். அதுவும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் துரைமுருகனின் மகனுக்கு, தமிழ் தெரியவில்லை என, கிண்டல் அடிக்கின்றனர். இதில், எச்.ராஜாவுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. அவர், 'கமென்ட்' போடாமல் விமர்சிக்கிறார்.

போட்டோவையும், தகவலையும் முகநுாலில் பதிவிட்டது நான் தான்; மறுக்கவில்லை. பா.ஜ.,வினர் போல, ஒரு விஷயத்தை கூறி விட்டு, அதிலிருந்து பின் வாங்கி, என், 'அட்மின்' எனக்கு தெரியாமல் செய்துவிட்டார் என்று சொல்லும் வழக்கம் எனக்கில்லை. எழுத்துப் பிழை உண்மை தான். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash - Chennai,இந்தியா
01-ஜூலை-202123:53:59 IST Report Abuse
Prakash இதில் என்ன சார் ஆச்சரியம் ...தமிழை கொன்றவர்கள் கொன்றுகொண்டிருப்பவர்கள் கொல்லபோகிறவர்கள் சார்த்த கட்சியில் இருப்பவர் இப்படி தான் எழுதுவார்கள் ...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202122:02:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இங்கிலீஸ் மீடியத்தில் படித்தவர் போலிருக்கு
Rate this:
Cancel
30-ஜூன்-202113:41:57 IST Report Abuse
திராவிடக் கிருமி திராவிடத் தமிழ் அப்படித்தான் இருக்கும்... அட்ஜஸ் செய்யண்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X