திருச்சி:திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் மீது, முதுகலை படிக்கும் ஐந்து மாணவியர் பாலியல் புகார் கூறி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரி நாடு முழுதும் பிரசித்தி பெற்றது. இங்கு, எம்.ஏ., தமிழ் படிக்கும் ஐந்து மாணவியர், மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் அளித்த புகார்:
தமிழ் ஆய்வுத் துறை தலைவர் பால் சந்திரமோகன், 54 வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து, இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.உச்சகட்டமாக, சட்டை, பேன்டை தளர்த்தி, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்தபடியே வகுப்பறையில் இருந்தோம்.
மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அங்கும் ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். இதே துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியை நளினி, 43, 'ஹெச்.ஓ.டி.,யை பார்க்க போகும் போது, முகம் கழுவி, மேக்கப் போட்டு தான் போக வேண்டும்' என வலியுறுத்துகிறார். எங்களால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆகையால் கல்லுாரியில் இருந்து வெளியேற விரும்புகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த முதல்வர், கல்லுாரியில் செயல்படும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குழு மூலம் விசாரிக்க உத்தரவிட்டார்.இந்த குழுவினர், புகார் அளித்த மாணவியர், பால் சந்திரமோகன், நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கல்லுாரி நிர்வாகத்திடம் கடந்த மாதம் கொடுத்துள்ளனர்.இதன் அடிப்படையில், விரைவில் தமிழ்த் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியை மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement