பொது செய்தி

தமிழ்நாடு

வறுமையில் தவிக்கும் தியாகராஜ பாகவதர் பேரன்!

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை:தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் நடித்த, ஹரிதாஸ் படம், 1944 முதல், 1946 வரை, மூன்று தீபாவளி பண்டிகையை கடந்து, தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.வசூல் மன்னனாக திகழ்ந்த, அவரது மகள் வழி பேரன் சாய்ராம் குடும்பத்தினர், தற்போது வசிக்க வீடு இன்றி, வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும்வறுமையில் வாடுகின்றனர்.'அரசு தங்களுக்கு வீடு வழங்கி உதவ
வறுமையில் தவிக்கும்  தியாகராஜ பாகவதர் பேரன்!

சென்னை:தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் நடித்த, ஹரிதாஸ் படம், 1944 முதல், 1946 வரை, மூன்று தீபாவளி பண்டிகையை கடந்து, தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.வசூல் மன்னனாக திகழ்ந்த, அவரது மகள் வழி பேரன் சாய்ராம் குடும்பத்தினர், தற்போது வசிக்க வீடு இன்றி, வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும்வறுமையில் வாடுகின்றனர்.

'அரசு தங்களுக்கு வீடு வழங்கி உதவ வேண்டும்' என, பேரனான சாய்ராம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது பேட்டி:தியாகராஜ பாகவதருக்கு இரண்டு மனைவியர். 2வது மனைவி ராஜம்மாளின் மகள் அமிர்தலட்சுமி. அவருக்கு நான் உட்பட மூன்று மகன்கள்; ஒரு மகள். சிறுவயதிலேயே அப்பா இறந்து விட்டார்; அம்மாவும் இல்லை.எங்களுக்கு பாட்டி தான் எல்லாமுமாக இருந்தார்.

நாங்கள் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு, கொரோனா காலத்தைசமாளிக்க முடியாமல் தவிக்கிறோம். வாடகை வீட்டில் வசிக்கும் நாங்கள், வாடகை கொடுக்கக்கூட பணமின்றி கஷ்டப்படுகிறோம்.
ஊரடங்கால் வேலைவாய்ப்பும் சரியாகஅமையவில்லை. பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு நடிகர்கள் பார்த்திபன்,
சிவகுமார் குடும்பத்தினர் உதவுகின்றனர்.இந்த காலத்தில், வீட்டு வாடகை பெரிய சுமையாக உள்ளது. தற்போதைக்கு அரசு தரப்பில் வீடு ஒதுக்கி கொடுத்தால்,நாங்கள் அனைவருமே தங்கி கொள்வோம்.

இதற்கு முன், 2008ல், எங்கள் பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டோம். அவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார்.போட்டோகிராபரான எனக்கு சொந்தமாக கேமரா இல்லை. இதனால், வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகிவிட்டது.சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தில், இரண்டு நாட்கள் பணியாற்றினேன். ஒரு நாளுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தனர்.அதன் பின் பெரிய வாய்ப்பு வரவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202102:54:29 IST Report Abuse
tamilvanan பாகவதர் உயிருடன் இருந்தபோது தங்கத்தட்டில் சாப்பாடு என்று ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர். தன சொத்தை காப்பாற்றிக்கொள்ள அவருக்கும், இரண்டு மனைவியருக்கும் தெரியவில்லை. அவர் சந்ததியார்களுக்கு மக்கள் காட்டும் வரிப்பணத்திலிருந்து தண்டமா? அவர் பாடல்களின் உரிமையை வழங்கலாம். அவருக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சினிமா நடிகர்களும், பாடகர்களும், உதயநிதி போன்று சினிமா தயாரிப்பாளர்கள் உதவலாம். அதை விட்டு விட்டு அரசின் வரிப்பணத்திலா கையை வைப்பது. இது நீதி அல்ல.
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
02-ஜூலை-202111:23:53 IST Report Abuse
S.K. Praba யாராக இருந்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை ஏதாவது தந்து அரசு உதவலாம். நிதி உதவி வழங்க ஆரம்பித்தால், தொடர்ந்து அதையே எதிர் பார்க்க தோன்றும்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202121:56:34 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு அரசு உதவும் (மக்கள் வரிப்பணத்தில்) ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X