பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா டூ கோவை 'கொரோனா எக்ஸ்பிரஸ்':மாமூலுக்காக தொற்றை கடத்திய அதிகாரிகள்

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கேரளாவில் இருந்து தங்கு தடையின்றி தினமும் வந்து செல்லும் வாகனங்கள்தான், கோவை தொற்று குறையாமல் முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் என தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில், மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமுள்ளது.கோவையை ஒட்டியுள்ள
கேரளா டூ கோவை கொரோனா எக்ஸ்பிரஸ், மாமூல், தொற்றை   அதிகாரிகள்

கேரளாவில் இருந்து தங்கு தடையின்றி தினமும் வந்து செல்லும் வாகனங்கள்தான், கோவை தொற்று குறையாமல் முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில், மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமுள்ளது.கோவையை ஒட்டியுள்ள கேரளாவில் இருந்து தினமும் பலர் பல்வேறு வாகனங்களில் எவ்வித அனுமதியுமின்றி பணிக்கும், தொழிலுக்கும், கோவை வந்து செல்வதே தொற்று அதிகம் பரவ காரணம்.


latest tamil news





'இ - பாஸ்' தேவை



கொரோனா தொற்று அதிகமாகி, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்குச் செல்வதற்கே 'இ - பாஸ்' தேவை என்றனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் அரசு ஊழியர்களையே, தங்கள் மாவட்டத்தில் அனுமதிக்க முடியாது என, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். இதனால், கோவையைச் சேர்ந்த பலரும், நீலகிரி மாவட்டத்திலேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கேரளாவில் இருந்து கோவைக்கு தினமும் தங்கு தடையின்றி பலரும் வந்து செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி, கேரள அரசு பஸ்சை தனியார் ஒருவர் வாடகைக்கு எடுத்து, பல மாதங்களாக இயக்கி வந்தது தெரிய வந்துள்ளது.


தண்டிக்கப்பட வேண்டும்



கோவை - பாலக்காடுக்கு 45 ரூபாய் வாங்கும் கேரள அரசு பஸ்சில், இவர்கள் தினமும் 200 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர்.தமிழக எல்லையான வாளையாரில் உள்ள தமிழக போக்குவரத்துத் துறை மற்றும் போலீஸ் செக்போஸ்ட்களில் இருப்போருக்கு, மாமூல் வாரி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இது பற்றி, கோவை கலெக்டருக்கு புகார் சென்ற பின், அவரது உத்தரவின்படி, கோவை மேற்கு ஆர்.டி.ஓ., குமாரவேல், கேரள அரசு பஸ் ஒன்றைப் பிடித்து எச்சரித்து அனுப்பிஉள்ளார்.

இதேபோல, மூன்று கேரள அரசு பஸ்கள், தினமும் இயக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.நேற்று முதல், வாளையார் செக்போஸ்ட் வழியாக, கேரளா வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகள் வழியே இவை இயக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

அவற்றையும் தடுக்க வேண்டும். பல மாதங்களாக, மாமூலுக்காக தொற்றைக் கடத்திய அனைத்து அலுவலர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.


'அரசு அறிவுறுத்தல் இல்லை'



கோவை மேற்கு ஆர்.டி.ஓ., குமாரவேல் கூறியதாவது:கேரளாவில் இருந்து கோவைக்கு அனுமதியின்றி இயக்கப்பட்ட மூன்று கேரள அரசு பஸ்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பஸ்சை இயக்க மட்டும், மார்ச் மாதத்தில் அனுமதி பெற்றிருப்பதாகச் சொல்கின்றனர். அதை ஆய்வு செய்ய வேண்டும்.பொதுப் போக்குவரத்து வாகனங்களை மட்டும் தான் நாங்கள் தடுக்க முடியும். தனியார் வாகனங்களை ஆய்வு செய்து தடுக்கும் அதிகாரம், போலீசாருக்கு மட்டுமே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினத்திடம் கேட்டதற்கு, ''கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில், தமிழக எல்லையில்
'இ - பாஸ்' சோதனை செய்ய வேண்டும் என, எங்களுக்கு அரசிடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. ஆனாலும், சந்தேகத்துக்குரிய வாகனங்களை நாங்கள் அவ்வப்போது ஆய்வு செய்கிறோம்,'' என்றார்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani - thirumayam,இந்தியா
30-ஜூன்-202111:20:19 IST Report Abuse
 mani கோவை இல் உள்ள எம் பீ தான் கோவை காலெக்ட்ர் இடம் அனுமதி வாங்கினார் என்று ஒரு செய்தி கேரளா மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறர்கள் . அதனால் அவர்களுக்கு வசதியாக பஸ் அனுமதி வாங்கினார் .தமிழ் மக்கள் எப்படி போனால் அவருக்கு கவலை இல்லை .கேரளா மக்கள் கஷ்டப்படக்கூடாது.எப்படி நம்ம எம் பீ
Rate this:
Cancel
Dr N K Chandrasekaran - Coimbatore ,இந்தியா
30-ஜூன்-202111:07:55 IST Report Abuse
Dr N K Chandrasekaran காவல்துறை அதிகாரி எங்களுக்கு இ பாஸ் செக் செய்ய உத்திரவு இல்லை என்கிறார். கோவையிலிருந்து ஈரோடுக்குப் போனாலே இ பாஸ் செக்பண்ணறாங்க. கேரளாவிலிருந்து்வரும் தனியார் வாகனங்களைப் பரிசோதிக்க அனுமதி இல்லை என்றால் என்ன ஒரு கேலிக்கூத்து. பல நூறு தொற்றுக்களை கோவைக்குள் அனுப்பியவர்களை அரசு விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
NATARAJAN R - bangalore,இந்தியா
30-ஜூன்-202111:02:19 IST Report Abuse
NATARAJAN R மொத்தத்தில் நமது அதிகாரிகள் எல்லோரும் பிற அதிகாரிகளை கை காட்டுவது குறியாக இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X