அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
''தமிழக சுகாதார துறைக்கு, மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், பல நுாறு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,'' என, தமிழகசிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பீட்டர்அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:தமிழகத்தை கொரோனா முதல் அலை வாட்டியபோது, அதிலிருந்து மக்களை மீட்க, அப்போதைய அ.தி.மு.க., அரசு முயற்சி எடுத்தது. தொற்றில் இருந்து
மருத்துவ பொருட்கள், உபகரணங்கள், கொள்முதல் ,முறைகேடு

''தமிழக சுகாதார துறைக்கு, மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், பல நுாறு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,'' என, தமிழகசிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பீட்டர்அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:தமிழகத்தை கொரோனா முதல் அலை வாட்டியபோது, அதிலிருந்து மக்களை மீட்க, அப்போதைய அ.தி.மு.க., அரசு முயற்சி எடுத்தது. தொற்றில் இருந்து மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களை காக்க, லட்சக்கணக்கான அளவில் உயிர் காக்கும் கவச உடைகள்வாங்கப்பட்டன.இந்த கவச உடைகள், திருப்பூரைச் சேர்ந்த, 'அனிதா டெக்ஸ்காட்' என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன. ஒரு கவச உடையின் விலை 330 ரூபாய்.தயார்


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதே கவச உடைகளை வாங்க தி.மு.க., அரசு, 'டெண்டர்' கோரியுள்ளது. இந்த பணிகள் வெளிப்படையாக நடப்பதால், அது தொடர்பான எல்லா விவரங்களையும், துறையின் இணைய தளத்தில் பார்க்க முடிகிறது.தற்போதைய டெண்டர் கேட்பில், திருப்பூரைச் சேர்ந்த அதே 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனமும் ஆர்டரை பெற, விலைப்பட்டியல் சமர்ப்பித்துள்ளது. அதில், கடந்த ஆட்சியில் 330 ரூபாய்க்கு விற்ற கவச உடையை, தற்போது 130 ரூபாய்க்கு தரத் தயார் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


latest tamil news
ஊழல்அப்படி என்றால் கடந்த ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும், ஒரே பொருளின் விலை வித்தியாசம் 200 ரூபாய். இது முறைகேடு தானே.இப்படித்தான், எல்லா விஷயங்களிலும், அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளை நடந்திருக்கிறது. அதையே, சமீபத்தில் வெளியான மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையும் தெளிவாக கூறியிருக்கிறது. கவச உடை வாங்கியதில் மட்டுமே, இவ்வளவுகொள்ளை என்றால், கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வாங்கியது, சாப்பாடு கொடுத்தது என, பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது; அவற்றிலும் ஊழல் நடந்திருக்கிறது.


விபரம்


திருப்பூர் நிறுவனத்தை பொறுத்தவரை, அந்த நிறுவனமே கடந்த ஆட்சியில் பங்கெடுத்த முக்கியமான நபரின் பின்புலத்தில் இயங்கும் நிறுவனம் என்றும் தகவல் வருகிறது. அது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.எல்லா விபரங்களும் வந்ததும், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முந்தைய ஆட்சியின் சுகாதார துறை முறைகேடுகள் குறித்து, தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை விடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்


தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் வாழும், மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினர் நலன்களை பேணிக் காக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், 1989 டிசம்பர் 13ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை அமைத்தார்

.இதற்காக, மாநில சிறுபான்மையினர் ஆணைய சட்டம் - 2010ல் உருவாக்கப்பட்டு, சட்டப்பூர்வ அதிகாரம் பெற்று, இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை, முதல்வர் ஸ்டாலின் திருத்தி அமைத்து, அதன் தலைவராக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்சை நியமித்துள்ளார்.

இவர், 1989, 1991ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், தென்காசி சட்டசபை தொகுதியில் இருந்தும்; 2006 சட்டசபை தேர்தலில், கடையநல்லுார் சட்டசபை தொகுதியில் இருந்தும், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்; சிறந்த பேச்சாளர்.-

-நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sysuus -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-202112:12:54 IST Report Abuse
sysuus snake knows his place
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
30-ஜூன்-202111:02:41 IST Report Abuse
Guna அதிமுக கூட்டணியில் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது ஜெயலலிதாவிடம் காங்கிரஸ் என்பது குங்குமம் சுமக்கும் கழுதைகள் என்று சபையிலே பேசியவர்தான் இந்த பீட்டர் அல்போன்ஸ். ஜால்றா. ஜால்றா
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202112:35:04 IST Report Abuse
vadiveluதமிழன் தானே ஊழல் செய்து இருப்பான், ஐவரும் தமிழன்தான் செய்வார்.ஊழலில் பிறந்து வளர்ந்தவர்கள் சில அரசியல் தலைவர்கள்.பிறவி குணம், மாறாது.ஈசன் அவனை குற்றம் சொல்வான், நாளை அவன் இவனை குற்றம் சொல்வான்.பிழைப்பு ஓடனுமே....
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-ஜூன்-202109:57:02 IST Report Abuse
அசோக்ராஜ் கையில பக்ஷீஸ். வாயில அறிக்கை. விசுவாச ஊழியன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X