அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,வின் பிரிவினை மோகம்!

Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (130)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு'
DMK, CM Stalin, Stalin


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது.

அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டுகோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.

கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.


latest tamil news


பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202102:01:20 IST Report Abuse
kumar இது பிரிவினை வாத மோகம் என்று நாகரீமாக சொல்லி மனதுக்குள் பிரிவினை வாத திமிர் என்றும் நீங்கள் நினைப்பு தெரிகிறது. திமிர் என்பதுதான் உண்மையும் கூட.
Rate this:
Cancel
Uma ( டெல்லி போன டோப்பா ) - திருச்சி ,இந்தியா
01-ஜூலை-202100:39:35 IST Report Abuse
Uma ( டெல்லி போன  டோப்பா ) இந்த டுபாக்கூர் இஸ்லாமிய கிருஸ்தவ கைக்கூலி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரிவினைவாதத்திற்கு செயல்படுவான்
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202100:09:53 IST Report Abuse
Vittalanand தலை சிங்கப்பூருக்கும் ரத்தம் சிகப்ருக்கும் மாற்ற போகுது. பாஸ்போர்ட்ல இந்தியன் என்று இருந்தால் மட்டுமே அனுமதி. இந்திய ஒன்றியம் என்று இறுக்காது. .வசதி எப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X