மேற்கு வங்கத்தில் 7,000 பெண்கள் மானபங்கம்: ஆய்வு குழு அறிக்கை

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்க தேர்தல் வன்முறையில், 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கத்திற்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., பெருவாரியான இடங்களை வென்றதாக, மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரிணமுல் காங்., ஆதரவாளர்கள், எதிர்கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து
WB post poll violence, NHRC committee, 7000 women molested

புதுடில்லி : மேற்கு வங்க தேர்தல் வன்முறையில், 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கத்திற்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., பெருவாரியான இடங்களை வென்றதாக, மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரிணமுல் காங்., ஆதரவாளர்கள், எதிர்கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 16 பேர் உட்பட, 25 பேர் பலியாயினர்.

இந்த சம்பவம் குறித்து, 'கால் பார் ஜஸ்டிஸ்' என்ற சமூக அமைப்பு சார்பில், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது. இக்குழு ஆய்வறிக்கையை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் நேற்று வழங்கியது.


latest tamil news


இது குறித்து கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்கட்சியினரையும், பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இதில், 25 பேர் பலியாகியுள்ளனர். 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏராளமான வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, வாழ்வாதாரங்களை இழந்து, அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த அறிக்கையை, உச்ச நீதிமன்றத்திடம் வழங்கி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோருமாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தி, வன்முறைக்கு துணை போன அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-202114:25:58 IST Report Abuse
Rasheel ஒவ்வரு பிரியாணியில் உள்ளேயும் நமது பாதுகாப்பிற்கான எதிராக நாமே வெடி வைத்து கொள்கிறோம்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-202114:08:51 IST Report Abuse
Rasheel வங்காளத்தில் தேர்தலுக்கு பின்னால் நடந்த கலவரம் மிக பெரிய சம்பவம். அது காந்தி காலத்தில் நடந்த நவகாளி படுகொலையை போல் நடந்த இன்னொரு ஒத்திகை. நாம் தான் விழித்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
30-ஜூன்-202114:53:57 IST Report Abuse
Sivagiri வேறு எந்த நியூஸ்-பேப்பரில் , மீடியாவில் ஒரு சின்ன செய்தி கூட இல்லை - ஏன் என்று கேட்க நாதி இல்லாத மக்கள் - ஐயோ பாவம் - சதிகளை , பொய்களை நம்பி ஒட்டு போட்டவர்கள் - தன் பெண்களை கொடுமை செய்தும் கூட - பதவிக்காக மானம் இல்லாமல் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருக்கும் கேடு கேட்ட அரசியல் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X