ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள்; தென் ஆப்பிரிக்க சட்டத்துக்கு எதிர்ப்பு

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
ஜோஹனஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து உள்ளது.உலக அளவில் மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கு ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி
South Africa, Women Marrying, Multiple Husbands, தென் ஆப்ரிக்கா, பெண்கள், பல கணவர்கள், திருமணம், சட்டம், எதிர்ப்பு

ஜோஹனஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து உள்ளது.

உலக அளவில் மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கு ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

'ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிப்பதை போல, ஒரு பெண், பல ஆண்களை மணக்க அனுமதிக்க வேண்டும்' என, பாலின உரிமை ஆர்வலர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து திருமண சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, இதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்தது.


latest tamil news


இந்த புதிய சட்டம் குறித்து அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த புதிய சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அரசு கேட்டது. இதற்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.'இது ஆப்பிரிக்க கலாசாரத்தை அழித்துவிடும். பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆணின் இடத்தை பெண்ணுக்கு வழங்க முடியாது' என, பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G R Rajan - Mumbai,இந்தியா
06-ஜூலை-202117:45:29 IST Report Abuse
G R Rajan நண்பர்களே இந்த சட்டம் நமது கலாச்சாரத்திற்கு மற்றும் மனித குலத்திற்கு எதிரானது. இதுபோன்ற சட்டங்கள் அவர்களுடைய எதிர்காலத்திற்கும் அவர்களுடைய குழந்தைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் இந்த சட்டமானது கொடூரமானது மற்றும் கொடூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஒரு சராசரி ஆய்வு முடிவு இந்தியாவில் பத்தில் ஆறு பங்கு தனிப்பட்ட விரோதம் மற்றும் குடும்பம் சார்ந்த குற்றங்களாக இருக்கிறது. இவர்களுடைய குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல குற்றச் சம்பவங்கள் பின்னணியாக இருப்பது இதுபோன்ற அவருடைய குடும்பத்தில் பிறந்த குழந்தை தயவுசெய்து இதுபோன்ற சட்டம் மற்றும் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். நம்முடைய கலாச்சாரத்தில் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஒரு காலத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் சிறந்தது அதையே உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது நன்றி வணக்கம்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
06-ஜூலை-202116:06:23 IST Report Abuse
Sai அந்த சட்டம் அங்கே வாணாம்னா இங்கே அனுப்பிடுங்க
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-ஜூலை-202114:29:20 IST Report Abuse
M  Ramachandran மாத்து உலகை அவர்களுக்கு தேவை. இஙகு தலைவர்கள் பக்கத்தில் ஒன்று கடத்தி ஒன்று அவசய்துக்கொன்று அவசரதிர்க்கொன்று இது யில்லாமல் ஊர் பக்கம் போயி தொண்டரை சரக்கு வாங்க அனுப்பி அவன் மனைவியும்சேர்த்து கொள்வது. அமைச்சர்பதவியில் அமரவைத்து அதற்கு பிரிதி உபகாரமாக அவன் மனைவியை ஜாதி மத வேறுபாடின்றி அப்பபோ ஒத்தாசைக்கு வைத்து கொள்வதெல்லாம் நடந்திருக்கிறது. அன்கு மறைவாக ஏதும் செய்ய வில்லையே. அவர்கள் தொன்று தொட்டு செய்கின்ற செயல்.. அதை அவர்கள் விரூபிம்பாவிடில் சட்டத்தை போட்டு பழக்கத்தை நிறுத்தி கொள்ளாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X