டெல்டா வைரசுக்கு எதிராக கோவாக்சின் திறம்பட செயல்படுகிறது: அமெரிக்க சுகாதார நிறுவனம் தகவல்

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
வாஷிங்டன்: 'கோவாக்சின் தடுப்பூசி கோவிட் வைரசின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது' என, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.,) தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் ஒரு பகுதியான தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.,) இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவின்

வாஷிங்டன்: 'கோவாக்சின் தடுப்பூசி கோவிட் வைரசின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது' என, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.,) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் ஒரு பகுதியான தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.,) இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



இந்தியாவின் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கோவாக்சின் தடுப்பூசி கோவிட் வைரசின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளை நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை இந்த தடுப்பூசி தூண்டுகிறது; கோவிட் வைரசின் உருமாற்றமடைந்த வைரசுகளுக்கு எதிராக ஆன்டிபாடிகளை திறம்பட உருவாக்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



'டெல்டா வகை வைரசுக்கு எதிராக, தடுப்பூசிகளின் செயல்பாடுகள் மிகவும் திறன்வாய்ந்ததாக அமையவில்லை. மேலும், அடுத்தடுத்து ஏற்படும் உருமாறிய வைரஸ்களால், தடுப்பூசிகள் முழுமையாக பலனளிக்காமல் போகலாம்' என, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவின் என்.ஐ.எச்.,ன் இந்த அறிக்கை ஆறுதல் அளிப்பதாக உள்ளது என, வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarajan - chennai,இந்தியா
30-ஜூன்-202114:57:06 IST Report Abuse
Ramarajan Made in India.
Rate this:
Cancel
வாழ்க பாரத தேசம் விஞ்ஞானிகள் வாழ்க பாரதம், கோவாக்ஸின் செலுத்திக் கொன்ட நம் தேசத்தினர் வெளிநாடு செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. உலக சுகாதார அமைப்பு அரசியல் செய்யாமல் கோவாக்சினை அங்கிகரித்து நம்மவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கனும். மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கனும்
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
30-ஜூன்-202111:20:05 IST Report Abuse
Ramona தெய்வமே நன்றி நன்றி, எறியும் வயிற்றில் எண்ணை ஊற்றாமல் தண்ணீர் ஊற்றி அதை அனைத்தீர்கள் ,அனைத்து பக்தர்கள் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X