பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்,தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில
தமிழகம், சென்னை வானிலை மையம், மழை, தமிழகம், புவியரசன்,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்,

தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பசலனம் காரணமாக


ஜூலை 1ல்

தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.


ஜூலை2

வேலூர், ராணிப்பேட்டை,சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


ஜூலை 3

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.


ஜூலை 4ல்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒர சில இடஙகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9 செ.மீ.,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 8 செ.மீ.,
கரூர் மாவட்டம் பரமத்தியில் 6 செ.மீ.,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இன்று (ஜூன் 30 )முதல் ஜூலை 4ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கீ.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X