சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மூன்றாவது அணி?

Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மூன்றாவது அணி?'உள்ளுக்குள் இருக்கும் பிரச்னையையே அவரால் தீர்க்க முடியவில்லை. வெளியில் உள்ள பிரச்னைகளை எப்படி தீர்க்க போகிறார்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை கிண்டலடிக்கின்றனர், அவரது அரசியல் எதிரிகள். அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக சரத் பவார், சமீபத்தில் முக்கிய கட்சிகளின்


அக்கம் பக்கம்


மூன்றாவது அணி?



'உள்ளுக்குள் இருக்கும் பிரச்னையையே அவரால் தீர்க்க முடியவில்லை. வெளியில் உள்ள பிரச்னைகளை எப்படி தீர்க்க போகிறார்' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை கிண்டலடிக்கின்றனர், அவரது அரசியல் எதிரிகள். அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக சரத் பவார், சமீபத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன், மும்பையில் ஒருமுறையும், டில்லியில் இரண்டு முறையும் ரகசிய ஆலோசனை நடத்தினார்.திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை, மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது.

பா.ஜ.,வினரோ, இதை பற்றி சற்றும் அலட்டிக் கொள்ளவில்லை. 'மூன்றாவது அணிக்கெல்லாம் அடுத்த தேர்தலில் வேலையே இருக்காது' என்கின்றனர். காங்கிரஸ் பிரமுகர்களோ, 'சரத் பவார் கட்சிக்குள்ளேயே ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதில் அஜித் பவாருக்கும், சரத் பவார் மகள் சுப்ரியாவுக்கும் மோதல் நடக்கிறது. முதலில் அதை தீர்த்து வைக்க சொல்லுங்கள்' என்கின்றனர்.'அஜித் பவார் - சுப்ரியா பஞ்சாயத்தை தீர்ப்பதற்காக தான் சரத் பவார், பிரசாந்த் கிஷோருடன் ஆலோசித்தார். மூன்றாவது அணியாவது, மண்ணாங்கட்டியாவது...' என்கின்றனர், சரத் பவாருக்கு நெருக்கமானவர்கள்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-ஜூலை-202102:53:48 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே Prashant Kishor kku காங்கின் மீது yen இவ்வளவு கோவம் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அது மண்ணை கவ்வுது
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-ஜூலை-202115:43:18 IST Report Abuse
r.sundaram அந்த உட்கட்சி பூசல் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் மூன்றாவது அணி பற்றிய பேச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X