பொது செய்தி

இந்தியா

ரூ.3,000 கோடி கடன் வழங்க திட்டம் : உலக வங்கி அறிவிப்பு

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-நம் நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினர் நிதி சுமையில் இருந்து மீள்வதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து, உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஜுனைத் அகமது நேற்று கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து, 264 கோடி

புதுடில்லி-நம் நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினர் நிதி சுமையில் இருந்து மீள்வதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது.



latest tamil news


இது குறித்து, உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஜுனைத் அகமது நேற்று கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து, 264 கோடி ரூபாய் நிதியை உலக வங்கி இதுவரை அளித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா பரவல், எதிர்கால இயற்கை பேரழிவு, பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மீண்டெழ, இந்த கடன் தொகை பெரும் உதவியாக இருக்கும்.இந்த கடன் தொகைக்கான முதிர்வு காலம், 18.5 ஆண்டுகளாகவும், கூடுதலாக 5 ஆண்டுகள் சலுகை காலமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறத் அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-ஜூலை-202109:49:15 IST Report Abuse
பாமரன் நாட்டில் ஜிஜி ஆட்சிக்கு வந்ததும் ஒலக வங்கி உள்ளூர் வங்கி மற்றும் ரத்த வங்கிகளில் கூட கடன் வாங்கறதில்லைன்னு இங்கேயும் மற்ற சமூக ஊடகங்களிலும் கம்பு சுத்தும் பகோடாஸ் இந்த நியூஸை சேவ் பண்ணி வைத்து கொள்ளவும்... முக்கியமா கொக்கி கொமாரு லைப்ரரியில் சேமித்து வைக்கனும்... நாளைக்கே காண்ட்ராக்ட் ரினிவ் ஆகலைன்னா உபயோகப்படும்ல...🤭🤭
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
01-ஜூலை-202107:38:52 IST Report Abuse
radha உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஜுனைத் அகமது. என்னது ஜீ ஜீ நாட்டுல முஸ்லீம் அதிகாரியா. நம்ம அமித் ஜீ, எச் ராஜா, அர்ஜுன் சர்பத், ரங்கராஜ் பீகாரி க்கு இந்த விஷயம் தெரியாதா .
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
01-ஜூலை-202107:33:45 IST Report Abuse
radha ப்பூ . வெறும் மூவாயிரம் கோடி தானா. எங்க ஜீ ஜீ, நிம்மி அக்காவும் ஒரு லச்சம் கோடி இருபது லச்சம் கோடி கொடுத்து இந்தியா எங்கேயோ போயிட்டு இருக்கு. பேசாம ஜீ ஜிய உலக பிரதமரா ஆக்கி உலகத்தை ஒரு வழி பண்ணுங்க ப்ளீஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X