ரூ.3,000 கோடி கடன் வழங்க திட்டம் : உலக வங்கி அறிவிப்பு| Dinamalar

ரூ.3,000 கோடி கடன் வழங்க திட்டம் : உலக வங்கி அறிவிப்பு

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (5) | |
புதுடில்லி-நம் நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினர் நிதி சுமையில் இருந்து மீள்வதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து, உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஜுனைத் அகமது நேற்று கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து, 264 கோடி

புதுடில்லி-நம் நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினர் நிதி சுமையில் இருந்து மீள்வதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது.



latest tamil news


இது குறித்து, உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஜுனைத் அகமது நேற்று கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று துவங்கியதில் இருந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 12 ஆயிரத்து, 264 கோடி ரூபாய் நிதியை உலக வங்கி இதுவரை அளித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், நாட்டின் முறைசாரா உழைக்கும் வர்க்கத்தினரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக, 3,717 கோடி ரூபாய் கடன் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா பரவல், எதிர்கால இயற்கை பேரழிவு, பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மீண்டெழ, இந்த கடன் தொகை பெரும் உதவியாக இருக்கும்.இந்த கடன் தொகைக்கான முதிர்வு காலம், 18.5 ஆண்டுகளாகவும், கூடுதலாக 5 ஆண்டுகள் சலுகை காலமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறத் அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X