அத்துமீறிய பிரிட்டன் கப்பலுக்கு அமெரிக்கா உதவி: 3ம் உலகப் போர் குறித்து ரஷ்யா மிரட்டல்

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (11)
Advertisement
மாஸ்கோ: தங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பிரிட்டன் போர்க் கப்பலுக்கு, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் உதவி செய்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயாவை ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு தங்களது எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவும், பிரிட்டனும் ரஷ்யா மீது, பல்வேறு

மாஸ்கோ: தங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பிரிட்டன் போர்க் கப்பலுக்கு, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் உதவி செய்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.


latest tamil news



உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயாவை ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு தங்களது எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவும், பிரிட்டனும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில், கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான டிபண்டர் கப்பல் கடந்த 23ம் தேதி அத்துமீறி நுழைந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது. அதையடுத்து, பிரிட்டன் கப்பலை எச்சரிக்கும் வகையில் தங்களது போர்க் கப்பல்கள் சுட்டதாகவும், பிரிட்டன் கப்பல் சென்ற பாதையின் குறுக்கே போர் விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தியதாகவும் ரஷியா கூறியது. ஆனால் இதை பிரிட்டன் மறுத்துள்ளது.



latest tamil news



இந்த நிலையில் நேற்று (ஜூன் 30) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளதாவது:கடந்த வாரம் கிரீமியா கடல் எல்லைக்குள் பிரிட்டன் கப்பல் அத்துமீறி நுழைந்தபோது, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் அந்தக் கப்பலுடன் தொடர்பில் இருந்து உதவிகள் செய்துள்ளது. அந்தச் சம்பவத்தின்போது ரஷ்யாவின் எதிர்வினைகள் குறித்து அறிந்துகொண்டு, அதனை பிரிட்டன் கப்பலிடம் தெரிவிக்கும் செயலில் அமெரிக்க விமானம் ஈடுபட்டது.


3ம் உலகப் போர்!


பிரிட்டன் கப்பலை நாங்கள் மூழ்கடித்திருந்தால்கூட மூன்றாம் உலகப் போர் மூண்டிருக்காது. அத்தகைய ஒரு போரில் இனி எங்களை வெல்ல முடியாது என்பது மேலை நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijai - chennai,இந்தியா
01-ஜூலை-202117:45:42 IST Report Abuse
Vijai புடினின் வீரம் ஜார்ஜியா, உக்ரைன் போன்ற குட்டி நாடுகளிடம் தான். கொக்கரித்து போதும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜூலை-202117:42:49 IST Report Abuse
Pugazh V இங்கே சிலர்.. அமெரிக்காவிற்கு ஆதரவாக ஏதோ எழுதுகிறார்கள். உலகவரலாற்றில் இன்று வரை எந்தப் போரிலும் அமெரிகா வெற்றி பெற்றதே கிடையாது. ஒவ்வொரு போரிலும் அமெரிக்காவிற்குத் தோல்வி தான் என்பதே நிஜம்.
Rate this:
visu - Pondicherry,இந்தியா
07-ஜூலை-202117:54:20 IST Report Abuse
visuஅப்படி சொல்லி திருப்தி அடைந்து கொள்ளுங்கள் வெற்றி என்றால் என்ன ? அவர்கள் நோக்கததை நிறைவேற்றி கொள்வதுதான் தாய் அவர்கள் எப்போதும் செய்து முடிக்கிறார்கள்...
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
01-ஜூலை-202116:23:51 IST Report Abuse
Murthy வேண்டும் என்றுதான் தோன்றுது....அப்போதுதான் பல வரைபடங்கள் மாறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X