சீனாவை அடிமைபடுத்த முடியாது: அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
பீஜிங்: 'சீனாவை யாரும் அடிமைபடுத்த முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள் ரத்தக்களறியை சந்திப்பார்கள்' என, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், தியானன்மென் கேட் சதுக்கத்தில் நடந்தது. இந்த விழாவை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் துவக்கி
China, Bullied, Xi Jinping, சீனா, அதிபர், ஷி ஜின்பிங்,

பீஜிங்: 'சீனாவை யாரும் அடிமைபடுத்த முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள் ரத்தக்களறியை சந்திப்பார்கள்' என, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், தியானன்மென் கேட் சதுக்கத்தில் நடந்தது. இந்த விழாவை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் துவக்கி வைத்தார்.


latest tamil news



மாவோ ஷியோடோங் போல் உடையணிந்திருந்த அவர் விழாவை துவக்கி வைத்து உரையாற்றியதாவது:தன்னம்பிக்கை காரணமாக, சீன மக்கள் வலிமையானவர்களாக திகழ்கின்றனர். சீனாவை அடிமைபடுத்தும் காலம் நிறைவு பெற்று விட்டது. எந்த நாட்டையும் நாம் அடிமைபடுத்தியது கிடையாது; அடக்கியதும் இல்லை; அடக்குமுறைகளை ஏவியதும் இல்லை. கடந்த காலங்களிலும் இதனை தான் செய்தாம். தற்போதும் இதையே செய்கிறோம். எதிர்காலத்திலும் இதுவே தொடரும்.


latest tamil news



அதேபோல், எந்த வெளிநாட்டு சக்திகளும், சீனாவை அடக்கவோ, அடக்குமுறைகளை ஏவவோ அடிமைபடுத்தவோ அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள், 140 கோடி மக்கள்கொண்ட இரும்பு சுவர் முன்னர் ரத்தக்களறியை சந்திப்பார்கள். தலை குனிவு ஏற்படும்.ராணுவத்தின் மீதான கட்சியின் கட்டுப்பாடுகள் தொடரும். ஹாங்காங் மீதான உரிமையை சீனா நிலைநாட்டி உள்ளது. தைவானும், சீனாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202108:42:00 IST Report Abuse
Tgsoundarrajan Balu சீனாவை அடிமை படுத்த முடியாது ஆனால் தன் ஆணவத்திலேயே விரைவில் அழிந்து விடும்
Rate this:
Cancel
02-ஜூலை-202105:22:31 IST Report Abuse
மனுநீதி மனிதகுலத்துக்கு எதிரான சீனாவை அடிமைப்படுத்தக்கூடாது முற்றிலுமாக அழித்து விட வேண்டும்...
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202122:08:49 IST Report Abuse
Rajagopal விசயம் அதில்லீங்க. நீங்க மத்த நாடுகள அடிமப்படுத்தப் பாக்குறீங்களே, அங்கதான் பிரச்சனையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X