மாணவர் கிரெடிட் கார்டு; ரூ.10 லட்சம் கல்விக் கடன் பெற வாய்ப்பு: மம்தா அறிமுகம்

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோல்கட்டா: உயர் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை கடனாகப் பெற, மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்துள்ளார்.திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, மாணவர்களின் உயர் கல்விக்காக கிரெடிட் கார்டு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்துக்குக் கடந்த வாரம் அமைச்சரவை

கோல்கட்டா: உயர் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை கடனாகப் பெற, மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, மாணவர்களின் உயர் கல்விக்காக கிரெடிட் கார்டு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்துக்குக் கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்தத் திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்து பேசியதாவது:



latest tamil news



மேற்கு வங்க அரசு சார்பில் இந்தத் திட்டத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். மாநில இளைஞர்கள் சுயசார்பு உடையவர்களாக முன்னேற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.இந்தக் கடனை இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிக்கும் இளங்கலை, முதுகலை, பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


15 ஆண்டு அவகாசம்!


மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 10 ஆண்டுகளாக வசிப்பவர்கள் மற்றும் 40 வயதுக்குக் குறைவானவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடங்க, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதன்படி மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை பணம் கடனாகப் பெறலாம். இந்தத் தொகைக்கு மிகவும் குறைந்த ஆண்டு வட்டியே வசூலிக்கப்படும். 15 ஆண்டுகள் வரை பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இத்திட்டத்தை வரவேற்றுள்ள கல்வியாளர்கள், 'பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றும், குடும்பச் சூழல் காரணமாக விரும்பிய பாடத்தை படிக்க முடியாமல் அவதிப்படும் மாணவர்களுக்கும், உயர்கல்வி மற்றும் பி.எச்டி., படிக்க உதவித் தொகை கிடைக்காமல் படிப்பைப் பாதியில் கைவிடுபவர்களுக்கும் இத்திட்டம் மிகுந்த பயனளிக்கும். இத்திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202109:24:33 IST Report Abuse
Lion Drsekar முதலில் இவர்கள் ஒன்றை தெளிவு படுத்தவேண்டும் கல்விக்ககா , நகைக்காக வாங்கும் பணத்தினை தள்ளுபடி செய்யமாட்டோம் என்று . இதுவரை கல்விக்கக பெட்ரா தொகையை சட்டம் தெரியாதவர்கள் , மனித நேயத்துடன் இருப்பவர்கள் மட்டுமே மனசாட்சிக்கும் சட்டத்துக்கும் பயந்து கட்டியிருக்கிறார்கள், பரவலாக நடந்து கொண்டு இருக்கும் ஒரு செயல்பாடு " எவன் நம்மை என்ன செய்து விடமுடியும் " என்று பேசிய வருகிறார்கள், இதற்கு காரணம் அரசுடைமையாக்கப்பட்ட வட்டிக்கடைகள் (பங்க்குகள் என்று அழைக்கப்படும் ) யார் வந்தாலும் உடனடியாக கல்வித்தொகையை கொடுக்கவேண்டும் அப்படி கொடுக்க மறுத்தால் அந்த மேலாளர் மீது கடும் நடவடிக்கை என்பதால் அவர்களும் பயந்து கொடுக்கிறார்கள்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
02-ஜூலை-202109:21:20 IST Report Abuse
vbs manian இன்னொரு சாரதா பணம் முழுங்கும் திட்டம்?
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
02-ஜூலை-202107:46:33 IST Report Abuse
C.SRIRAM யார் "15" வருடங்களுக்கு கடன் கொடுக்க போகிறார்கள் ?. மாநில அரசா?. ஏது நிதி ?. வங்கி கடன் என்றால் மாநில அரசு ஏன் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது . இந்த கடன்களுக்கு மாநில அரசு உத்ரவாதம் அளிக்குமா ?. இப்போது எல்லா வங்கிகளும் கல்வி கடன் கொடுக்கும் பொது இது எதற்கு ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X