சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஆபத்து வருமா?

Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆபத்து வருமா?'தலைக்கு மேல் கத்தியை தொங்கவிட்டு, முதல்வர் நாற்காலியில் அமரும்படி கூறினால் எப்படி இருக்கும்; அந்த அவஸ்தையை அனுபவித்தால் தான் தெரியும்' என்கின்றனர், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள். இவர்களது புலம்பலுக்கு காரணம், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவரான அரவிந்த் குமார் சர்மா.


அக்கம் பக்கம்


ஆபத்து வருமா?



'தலைக்கு மேல் கத்தியை தொங்கவிட்டு, முதல்வர் நாற்காலியில் அமரும்படி கூறினால் எப்படி இருக்கும்; அந்த அவஸ்தையை அனுபவித்தால் தான் தெரியும்' என்கின்றனர், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின்
ஆதரவாளர்கள். இவர்களது புலம்பலுக்கு காரணம், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவரான அரவிந்த் குமார் சர்மா. குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சர்மா, மோடி அங்கு முதல்வராக இருந்தபோது, அவரது முதன்மை செயலராக பணியாற்றியவர். மோடி பிரதமரானதும், பிரதமர் அலுவலக அதிகாரியாக பணியாற்றியவர். இந்த சர்மாவை தான், இப்போது உ.பி., அரசியலில் வலுக்கட்டாயமாக திணித்துள்ளனர் பா.ஜ., மேலிட
தலைவர்கள். உ.பி.,யில் எம்.எல்.சி.,யாக இவர் தேர்வு செய்யப்பட்டபோது, யோகி ஆதித்யநாத் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் சர்மாவின் பின்னணி தெரிந்ததும், சற்று கலங்கி விட்டார்.'அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் சர்மாவை முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்து விடுமோ...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார். சமீபத்தில் சர்மாவுக்கு கட்சியின் துணை தலைவர் பதவி தரப்பட்ட விவகாரமும், ஆதித்யநாத் தரப்பு கவலையை அதிகரித்துள்ளது. பா.ஜ.,வின் மூத்த தலைவர்களோ, 'துணை தலைவராக 15 பேர் உள்ளனர். அந்த 15 பேரில் ஒருவர் தான் சர்மா. எனவே, ஆதித்யநாத் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது' என, திட்டவட்டமாக கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
02-ஜூலை-202111:03:01 IST Report Abuse
yavarum kelir என்கவுண்ட்ட்ர் ஸ்பெஷல் யோகி ஐ தவிர வேறு யார் வந்தாலும் நஷ்டம் BJP க்கு தான். யோகிக்கு அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X