எட்டு பேர், 'கோட் -சூட்' தைத்து, முதல்வர் பதவிக்காக காத்திருக்கின்றனர்

Added : ஜூலை 02, 2021
Share
Advertisement
பெங்களூரு-''காங்கிரசில் அனைவரும், முதல்வராக தயாராக உள்ளனர். ஏற்கனவே அக்கட்சியின் எட்டு பேர், 'கோட் -சூட்' தைத்து, முதல்வர் பதவிக்காக காத்திருக்கின்றனர்,'' என, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் ம.ஜ.த., என்ற கட்சியே இல்லை. அக்கட்சியை ஒழித்து கட்டியதாக, சிலர் கூறி வருகின்றனர். சட்டசபை கூட்டம் கூட்டட்டும்.

பெங்களூரு-''காங்கிரசில் அனைவரும், முதல்வராக தயாராக உள்ளனர். ஏற்கனவே அக்கட்சியின் எட்டு பேர், 'கோட் -சூட்' தைத்து, முதல்வர் பதவிக்காக காத்திருக்கின்றனர்,'' என, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் ம.ஜ.த., என்ற கட்சியே இல்லை. அக்கட்சியை ஒழித்து கட்டியதாக, சிலர் கூறி வருகின்றனர். சட்டசபை கூட்டம் கூட்டட்டும். ம.ஜ.த.,வின் சக்தி என்னவென்பதை காண்பிப்போம். இனி ம.ஜ.த., ஆட்டம் ஆரம்பமாகும்.கூட்டணி அரசின் போது, என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது, அந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் அல்ல. நெருக்கடியான சூழ்நிலையில், முதல்வராக இருக்க வேண்டாம் என, கடவுளே என்னை பதவியிலிருந்து கீழே இறக்கி, என்னை காப்பாற்றினார்.கடவுள் என் உயிரை காப்பாற்றினார். எனவே, 17 எம்.எல்.ஏ.,க்கள் மீது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை.மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வர, காங்கிரசே காரணம். தேர்தலுக்கு இரண்டு ஆண்டு உள்ள நிலையில், முதல்வர் பட்டத்துக்காக, போட்டா போட்டி துவங்கிவிட்டது.காங்கிரசில் அனைவரும், முதல்வராக தயாராக உள்ளனர். ஏற்கனவே அக்கட்சியின் எட்டு பேர், 'கோட் - சூட்' தைத்து, முதல்வர் பதவிக்காக காத்திருக்கின்றனர்.வரும், 2023 தேர்தலுக்கு, இன்னும் கால அவகாசம் உள்ளது. இப்போதே முதல்வர் வேட்பாளர் பற்றி விவாதிப்பது, நகைப்புக்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X