சகிப்புத்தன்மை இல்லையா? சர்ச்சை பேச்சுக்கு சமாளிப்பு!

Updated : ஜூலை 02, 2021 | Added : ஜூலை 02, 2021 | கருத்துகள் (57)
Advertisement
'மின் தடையை பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை, மக்களுக்கு குறைந்து விட்டது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது, திடீர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்ததும், தான் அப்படி பேசவில்லை என்று, அமைச்சர் சமாளிக்கிறார்.மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை, கோட்டூர்புரம்,
மின் தடை,சகிப்புத்தன்மை,சுப்பிரமணியன்

'மின் தடையை பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை, மக்களுக்கு குறைந்து விட்டது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது, திடீர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்ததும், தான் அப்படி பேசவில்லை என்று, அமைச்சர் சமாளிக்கிறார்.

மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாலக அரங்கத்தில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: பொது மக்களுக்கு, சில நிமிட மின் தடையை கூட பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. பொது மக்களுக்காகவே நாங்கள், உங்களை நடு இரவில் கூட அழைத்து, தொந்தரவு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

பொது மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்ற அமைச்சரின் பேச்சு, சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கம்: நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை; பேசவும் மாட்டேன். உள்ளாட்சித் துறை, காவல் துறையினருக்கு அடுத்தபடியாக, மின்சார துறையினர் தான், மக்களின் நேரடி தொடர்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் உன்னதமான பணிகளை, இரவு, பகல் பாராமல், அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


latest tamil news


மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, மின் தடை ஏற்படும். அப்போது, மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், அதிகாரிகளை அழைத்து தொந்தரவு தருவது வழக்கம். எங்கள் வீட்டில் மின் தடை ஏற்பட்டதற்காக, அதிகாரிகளை அழைப்பதில்லை. பொது மக்களுக்காவே, நடு இரவிலும் அதிகாரிகளை தொந்தரவு செய்து வருகிறோம். பொது மக்களும் தங்களிடம் உள்ள மின் துறை தொடர்பான, அனைத்து அதிகாரிகளின் தொலைபேசி எண்களிலும் புகார் தெரிவிக்கின்றனர்.

எங்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே தான், நாங்களும் வேறு வழியில்லாமல், மின் வாரிய துறையினரை தொந்தரவு செய்து, மின் தடைக்கு தீர்வு காண வலியுறுத்துகிறோம். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
06-ஜூலை-202109:34:37 IST Report Abuse
W W மின் தடையை எப்படி சரி செய்வது அல்லது மிகவும் குறைப்பது என்பது குறித்து அதில் என்னனென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுப்பது நலம்.அதை விட்டு விட்டு சகிப்புத்தன்மையை வேண்டும் என்று கூறுவது வேடிக்கை யாக உள்ளது.இப்போது இருக்கும் கால கட்டதில் ஆன்லேயின் கிளாஸ், ஏஃஸம், வீட்டிலிருந்ததீ வேலை இவையெல்லாம் இன்வெர்டர் கொண்டு சரி செய்யமுடியாது ,மிக்சி, கிரைண்டர் , மின்சார பம்பு நெட் மோடம் எல்லாம் ஒர்க் செய்யாது அப்படி ஹை கெப்பபாசிட்டி இன்வெர்டர் விலையோ யானை விலை ,அதுவும் 100-200 watts பவர் எல்லா சமயத்திலும் வேஸ்ட் ஆக்கும் இது கட்டுப்படியாகாது.பவர் டிஸ்ட்ரிப்யூஷனில் சிங்கப்பூர் ,அமெரிக்க ,சவூதி அரேபியா மற்ற எந்த நாட்டிலும் இது போல் கேவலமான பவர் கேட் இல்லை, இல்லவே இல்லை.தயவு சேய்து அவர்களை கண்டு படியுங்கள்.இதில் எந்த எக்ஸ்உ ஸும் தீவை இல்லை. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தினமும் பவர் 3-4 முறை போகிறது அதன் மர்மம் என்ன ,இதீ கேரளாவிலோ ,குஜராத்திலோ இது மாதிரிபவர் கிட்யவே கிடையாது.அவர்களின் யார் வீட்டிழும் இன்வெர்டர் கிடையாது.இதனை சற்று சீரியசாக எடுத்து மாற்றம் செய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் - ஒரு ரிட்டயார்ட் E.E சீனியர் சிட்டிசன்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
05-ஜூலை-202118:11:44 IST Report Abuse
madhavan rajan அரசு செலவில் லலட்சக்கணக்கில் செலவு செய்து ஜெனெரேட்டர் இல்லாத மந்திரி, முதல்வர் வீடு உண்டா. இவர் வீட்டில் மின் தடை என்று கதை விடுகிறார். இதற்கு முந்தைய ஆட்சியிலும் பராமரிப்பு பணிகள் நடந்தன. அப்போது தடை இல்லாமலா இருந்தது. இரவு ஒரு மணிக்கு தடை ஏற்பட்டாலும் பராமரிப்பு என்றால் ஏற்றுக்கொள்வார்களா? இவர்களுடைய முந்தைய ஆட்சியின்போது ஏற்பட்ட மின் இல்லா மாநிலத்தின் கதியை நினைந்து மக்கள் அலறுகிறார்கள். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும். இரவெல்லாம் கண் விழித்து ஒரு மணி நேரம் போல மின்சாரம் வரும்போது தண்ணீர் பாய்ச்சுவார்கள் பயிருக்கு. இவர்களுக்கு மக்களுக்கு நல்லது செய்ய தெரியாது என்றாலும் பேச்சும் கிண்டலும் நன்றாக வரும். அதைவைத்துதான் ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயிக்கிறார்கள். காங்கிரசையும், கம்யூனிஸ்ட்டையும் கழட்டி விடும்போதெல்லாம் தோற்கிறார்கள் என்பது சரித்திரம்.
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
02-ஜூலை-202116:41:09 IST Report Abuse
சோணகிரி தீயமுகவின் இந்தக் காட்டாட்சியைத்தான் தமிழக மண்ணாந்தை மக்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்... கருமம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X