மோடிக்கு மாம்பழங்கள் பரிசாக அனுப்பிய மம்தா

Updated : ஜூலை 02, 2021 | Added : ஜூலை 02, 2021
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, 2011ல் முதல் முறையாக முதல்வரானதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு மாம்பழங்களை பரிசாக அனுப்பி வருகிறார்.இதன்படி மேற்கு வங்கத்தில் விளையும் உயர் ரக ஹிம்சாகர், மால்டா, லக்ஷ்மண்போக் மாம்பழங்களை, பிரதமர் மோடிக்கு அவர் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ளார்.மார்ச், ஏப்., மாதங்களில், மேற்கு
Mamata Banerjee,Modi,Mango,Narendra modi,நரேந்திர மோடி,மம்தா,மம்தா பானர்ஜி,மோடி

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, 2011ல் முதல் முறையாக முதல்வரானதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு மாம்பழங்களை பரிசாக அனுப்பி வருகிறார்.

இதன்படி மேற்கு வங்கத்தில் விளையும் உயர் ரக ஹிம்சாகர், மால்டா, லக்ஷ்மண்போக் மாம்பழங்களை, பிரதமர் மோடிக்கு அவர் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ளார்.மார்ச், ஏப்., மாதங்களில், மேற்கு வங்கத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தபோது, பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் மம்தா. அதன் பின்னும் விமர்சனங்களை தொடர்ந்து கூறி வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், அவர் மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த செயல் வெகுவாக பாராட்டப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜ., மூத்த தலைவர்களான, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மாம்பழங்களை மம்தா பானர்ஜி அனுப்பி வைத்துள்ளார். காங்., தலைவர் சோனியா, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவர் மாம்பழங்கள் அனுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X