சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இது என்ன அரசியல்?

Added : ஜூலை 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இது என்ன அரசியல்?'அடிக்கடி கட்சி தாவியவர்களுக்கு இவ்வளவு மரியாதை அளித்தால், காலம் முழுதும் உழைக்கும் நாமெல்லாம் எங்கு போவது...' என, முணுமுணுக்கின்றனர் திரிணமுல் கட்சி நிர்வாகிகள்.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தார் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.தேர்தலுக்கு முன்வரை, பா.ஜ., வீசிய

அக்கம் பக்கம்


இது என்ன அரசியல்?



'அடிக்கடி கட்சி தாவியவர்களுக்கு இவ்வளவு மரியாதை அளித்தால், காலம் முழுதும் உழைக்கும் நாமெல்லாம் எங்கு போவது...' என, முணுமுணுக்கின்றனர் திரிணமுல் கட்சி நிர்வாகிகள்.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தார் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.தேர்தலுக்கு முன்வரை, பா.ஜ., வீசிய வலையில் ஏராளமான திரிணமுல் தலைவர்கள் சிக்கினர். இதனால் கட்சியில் உள்ளவர்களை தக்க வைப்பதற்கு பெரும் அவஸ்தை பட்டார் மம்தா.ஆனால் மீண்டும் மம்தா ஆட்சி அமைத்த பின், நிலைமை தலைகீழாகி விட்டது. திரிணமுல் கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவியவர்கள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர் முகுல் ராய். திரிணமுல்லில் இருந்து பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்த இவர், தற்போது மீண்டும் மம்தாவிடமே அடைக்கலம் புகுந்துள்ளார்.இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மம்தா, அவரை சிறப்பான முறையில் கவுரவிக்கும் வகையில், நல்ல பதவி கொடுக்க முடிவு செய்துள்ளார்.கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்திய மம்தா, அவர்களிடம் முகுல் ராயை மனதார பாராட்டி பேசினார்.சந்திப்பு முடிந்து வெளியில் வந்த நிர்வாகிகள், 'முதுகில் குத்திவிட்டு ஓட்டம் பிடித்தவர்களுக்கு முதல் மரியாதை கொடுத்தால், விசுவாசிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படாதா... இது என்ன வகையான அரசியலோ...' என புலம்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-ஜூலை-202102:50:56 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஸ்லீப்பர் செல் என்பது வந்தேறி மதத்தினருக்கு மட்டும் உரியதா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-ஜூலை-202115:35:26 IST Report Abuse
r.sundaram இவர் பிஜேபிக்கு போனது அந்த கட்சியை உளவு பார்க்கத்தானே தவிர மனம் விரும்பியோ போனார்? நீதி தேர்தலில் எப்படி எல்லாம் பிஜேபி காய் நகர்த்துகிறது என்பதை அறியவே இவரை பிஜேபிக்கு அனுப்பினார்கள். தேர்தல் முடிந்து திதி ஆட்சி அமைத்தபின் இவர் கட்சிக்கு திரும்பினால் அது கட்சி தாவலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X