500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு: சேகர்பாபு

Added : ஜூலை 02, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
திருத்தணி:''தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தணி கோவிலில் நிலுவையில் உள்ள பணிகள், ஓராண்டுக்குள் முடிக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.ஆய்வு கூட்டம்திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகம், மலையடி வாரத்தில் உள்ள
 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு: சேகர்பாபு

திருத்தணி:''தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தணி கோவிலில் நிலுவையில் உள்ள பணிகள், ஓராண்டுக்குள் முடிக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


ஆய்வு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகம், மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கை மலைக்கோவிலில், ஒன்பது நிலை ராஜகோபுரம், கல்கார தீர்த்தம், தங்க விமானம், கோவிலின் இரண்டாவது மலைப்பாதை மற்றும் கோவில் குளங்களை, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின் அமைச்சர் கூறியதாவது:தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான, 79.9 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம், அறநிலைய துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 500 கோடி ரூபாய்.திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கடந்த காலங்களில் விரைவுபடுத்தப்படாமல் நிலுவையில் இருந்தன. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அறநிலைய துறை வாயிலாக, ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாகஅறநிலைய துறை ஆணையர், திருவள்ளூர் கலெக்டர், திருத்தணி எம்.எல்.ஏ., ஆகியோருடன் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்தேன். ஆய்வில், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.


குளங்கள் சீரமைப்பு

ராஜகோபுரத்தின் இணைப்பு படிகள் அமைப்பதற்கு, தொல்லியல் துறை அனுமதி பெற்று, விரைவில் துவங்கப்படும். ஒன்பது ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ள சரவணப்பொய்கை குளம், விரைவில் துார் வாரப்படும்.பக்தர்கள் தங்கும் விடுதிகள் நவீனப்படுத்தப்படும். மலைப்படியில் சிதிலமடைந்த மண்டபம் அகற்றி, புதிய மண்டபம் கட்டப்படும். அதேபோல, மலைக்கோவிலில்உள்ள குளங்கள் சீரமைக்கப்படும்.'ரோப் கார்'எட்டு ஆண்டுகளாக வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதுபார்ப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. விரைவில், தேர்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு விடப்படும்.

முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகள் அதிகம் என்பதாலும், முதியோர்கள் தரிசனம் செய்வதற்கு, 'ரோப் கார்' வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம், முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார். 'ரோப் கார்' அமைக்கவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு உண்டான இடங்கள் ஆய்வு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், திருவள்ளுர் கலெக்டர் அல்பி ஜான் வர்கிஸ், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி, தாசில்தார் ஜெயராணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
03-ஜூலை-202118:40:06 IST Report Abuse
Krish கோயில் நிலங்கள் மீட்கப்படும் செய்திகள் வேணாதபடி இருக்கிறது . இதில் ஒரு விஷயம் என்ன வென்றால் , ' அரசு இதனை நாள் அந்த நிலங்கள் யாரிடம் இருந்தது , அதனால் அவர்கள் அடைந்த நமைகள் 'பற்றியும் தெரிவிக்க வேண்டும் . நாம் வருமான வரி துறையினர் அப்போஅப்போது வருமான வரி சோதனைகள் 'பெரிய புள்ளிகள் , அரசியல் வாதிகள் ,கம்பெனிகளில் ' நடத்துகின்றனர் . ஆனால் ' அந்த ஆபிசர்கள் கைப்பற்றிய பணம் , சொத்துக்கள் அப்புறம் என்ன ஆயிற்று என்று செய்திகளே கிடை யாது . அதைபோல் கோயில் நிலங்கல் ஏக்கர் ஏக்கராக மீட்கப்படுகிறது , அவைகள் யாரிடம் இருந்தன , எத்தனை நன்மை அவர்கள் அடைந்தனர் , இப்போது அநத நிலங்களி என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அரசு எழுத்து பூர்வமாக ' கோர்டுகளுக்கு ' தெரிய படுத்த வேண்டும் .இல்லை என்ன்றால் அப்போது ஒருவர் கையில் இருந்தது ,இப்போது ' விஞ்சான பூர்வ லஞ்சத்திநை முதல் முதலாக நம் நாட்டில் துவங்கிவைத்த நபர்கள் ' இப்போது சும்மா இருப்பார்களா ' அவைகளும் அலைவரிசை லஞ்சம் , டெலிபோன் எக்ஸ்சேஞ் கேஸ்கள் போல் பிசு பிசுப்படுத்து போகும் .இந்த கோயில் ஆவணங்கள் ' உச்ச உயர் நீதி மன்றத்திடம் ' ஒப்படைக்கப்படவேண்டும் , இதுவே இந்துக்கள் கோரிக்கை .
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
03-ஜூலை-202118:32:51 IST Report Abuse
Loganathaiyyan 1) வட பழனியில் 5.2 ஏக்கர் நிலம் மீட்பு ரூ 250 கோடி மதிப்பு அனால் கடைசியில் பார்த்தால் அங்கு வாகனங்களை பார்க் செய்திருந்தார்கள் அந்த நிலம் யார் பெயரிலும் கோவில் சொத்திலிருந்து மாற்றப்படவில்லை???இதை எப்படி மீட்பு என்பது ?/?2) இதே போல இந்த நிலம் மீட்கப்பட்டது யாரவது தனது பெயரில் சொந்தம் செய்து கொண்டார்களா???இல்லையல்லவா பிறகு அது எப்படி மீட்பு ஆகும். 3) அங்கு 5.2 ஏக்கர் ரூ 250 கோடி???இங்கு 79.9 ஏக்கர் வெறும் ரூ 500 கோடி தானா ???ரூ 4,000 கோடி அல்லவா இருந்திருக்க வேண்டும்??ஆக்கிரமித்தது யார்???அது அவர்கள் பெயர் மீது மாற்றியமைக்கப்பட்டது அதை மீட்டீர்களா???சும்மா டப்பா அடிச்சே திராவிஷ முரடர்கள் கயவர்கள் கட்சி டாஸ்மாக் நட்டு மக்களை அறிவிலிகளாகவே வைத்த்திருக்கும் என்று இந்த மீடியா வார்த்தை பாதத்திலிருந்து தெளிவாகப்புரிகின்றது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-ஜூலை-202115:18:35 IST Report Abuse
vbs manian மீட்ட நிலத்தின் எதிர் காலம்????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X