பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : அவர்கள் தியாகிகளா?

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (90)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எல்.மூர்த்தி, உதகமண்டலம், நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இந்திரா பிரதமராக இருந்த போது, தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் நிராகரிக்கப்பட்ட

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எல்.மூர்த்தி, உதகமண்டலம், நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இந்திரா பிரதமராக இருந்த போது, தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் துாக்கிலிடப்பட்டனர். முன்னாள் பிரதமர் ராஜிவை வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கிலும், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.latest tamil newsஅதன்பின், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் சென்றன. உரிய கால கெடுவுக்குள் அவர் முடிவு எடுக்க தவறியதால், குற்றவாளிகள் துாக்கில் இருந்து தப்பி, ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளனர். சிறைக்குள் அவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 'நாங்கள் 28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால், கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழக அரசியல்வாதிகளும் அதற்கு ஆதரவு குரல் எழுப்புகின்றனர்.
'ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும்' என, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடப்பில் உள்ளது. ராஜிவ் கொல்லப்பட்ட போது அவர் மட்டும் இறக்கவில்லை; போலீசார், பொதுமக்கள்,கட்சிக்காரர்கள் என பலரும் உடல் சிதறி பலியாகினர். அவர்களுக்காக எந்த அரசியல்வாதியும் வருத்தப்படவில்லை; அவர்கள் குடும்பத்தின் பரிதாப நிலை குறித்து சிந்திக்கவே இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா, இ.பி.எஸ்., வரிசையில், கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினும் வலியுறுத்து கிறார். இதை, நெஞ்சில் இரக்கமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


latest tamil newsராஜிவ் கொலையாளிகள் நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லை. மக்களுக்கோ, சமுதாயத்திற்கோ அவர்கள் எந்த சேவையும் செய்யவில்லை. அவர்கள் நம் பிரதமரை கொலை செய்துள்ளனர். அப்படியிருக்கும் போது, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவது, தவறான முன்னுதாரணமாகி விடாதா?

Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202112:09:31 IST Report Abuse
Jothimani நமது நாட்டின் பிரதமரை கொலை செய்தது குற்றம் தான் ஆனால் அதற்கு தண்டனை கிடைத்து விட்டது விடுவிப்பதே சரி மேலும் இவர்கள் கொலை செய்யவில்லை கொலையாளிக்கு உதவி செய்ததாக உள்ளதால் தண்டனை முடிந்துவிட்டது விடுவிப்பதே சரி
Rate this:
Cancel
T.R.SANTHA KUMANAN - Trichy,இந்தியா
04-ஜூலை-202111:26:14 IST Report Abuse
T.R.SANTHA KUMANAN கொலைகாரர்களை தியாகிகள் என கூறி அதற்கு ஆதரவும் தரும் ஒரே அரசியல் கூட்டம் தமிழகத்தில் தான் இருக்க கூடும்.
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
03-ஜூலை-202123:46:53 IST Report Abuse
Ketheesh Waran இதுவரை இந்தியாவில் எந்தஒரு ஆயுள் தண்டனை கைதியும் 25 ஆண்டுகளுக்குமேலாக சிறையில் இருந்ததில்லை இந்த ஏழு பேர் 30 வருடங்களை சிறையில் கழித்துவிட்டார்கள். சட்டரீ தியாகவும் மனிதாமின அடிப்படயிலும் இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ராஜீவோட சேர்த்து பதினாலு தமிழர்கள் இறந்தது துன்பகரமானது அதேவேளை ராஜிவ் காந்தியின் நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததுடன் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதரிகள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதனை மறக்கவேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X