ஹவாலா பண வழக்கு: கேரள பா.ஜ. தலைவருக்கு போலீஸ் சம்மன்

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஹவாலா பணம் திருடப்பட்ட வழக்கில் பா.ஜ. தலைவர் சுரேந்திரனை விசாரணைக்கு ஆஜராகும் படி அம்மாநில போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.கேரள தேர்தல் சமயத்தில் ஒருவர் தன்னுடைய 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டதாக புகாரளித்தார். பணத்துடன் எர்ணாகுளம் - திரிசூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது ஒரு கும்பல் கொள்ளையடித்துச்

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஹவாலா பணம் திருடப்பட்ட வழக்கில் பா.ஜ. தலைவர் சுரேந்திரனை விசாரணைக்கு ஆஜராகும் படி அம்மாநில போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.



latest tamil news



கேரள தேர்தல் சமயத்தில் ஒருவர் தன்னுடைய 25 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டதாக புகாரளித்தார். பணத்துடன் எர்ணாகுளம் - திரிசூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது என கூறினார். விசாரணையில் அப்பணம் ரூ.3.5 கோடி ஹவாலா பணத்தின் ஒரு பகுதி என தெரியவந்ததாக போலீசார் கூறினர். பா.ஜ.க.,வுக்காக அப்பணத்தை அந்நபர் எடுத்துச் சென்றதாகவும் போலீசார் கூறினர். அப்புகாரை பா.ஜ.க., கடுமையாக மறுத்தது.
மாநில தலைவர் சுரேந்திரன், “இதற்கும் பா.ஜ.க.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நூறு சதவீதம் உறுதியாக உள்ளோம். காவல்துறையினரின் எந்தவொரு விசாரணையையும் நாங்கள் வரவேற்றுள்ளோம். யார் அழைத்தாலும் நாங்கள் ஒத்துழைப்போம்" என்று கடந்த மாதம் கூறினார். இந்நிலையில் இவ்வழக்கில் அவரை ஜூலை 6-ல் விசாரணைக்கு ஆஜராகும் படி கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தேர்தலில் பா.ஜ.க., கருப்பு பணத்தை விளையாட விட்டதாக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது. பாஜக மாநில தலைவர்கள் உட்பட பலர் அது தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக சுரேந்திரன் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது.


latest tamil news



தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரிடம் வேட்புமனுவை வாபஸ் பெற லஞ்சம் கொடுத்ததாகவும், பழங்குடித் தலைவர் ஒருவரை தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட வருவதற்கு ரூ.10 லட்சம் வழங்கியதாகவும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. அந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் மிகப்பெரிய வெற்றி பெற்றனர். பா.ஜ.க.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூலை-202122:41:56 IST Report Abuse
வாஸ்ஸுதேவன் வணக்கம். என்ன மாதிரி சிலர், இல்ல பலர் திரு. மோடியால் ஈர்க்கப்படோம். ஐயா, இது போன்ற கேடிகள் கட்சிக்குவேண்டாம். தன்னார்வமுள்ள தோண்டு நிறுவனம் வேண்டாம், உள்ளம் படைத்தவர்களை கட்சியில் முன் நிறுத்துங்கள்.அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று உங்களிடம் வந்தால் ........ மக்களுக்கு நல்லது செய்யுங்கள் ஓட்டுக்கள் தானாக தேடிவரும்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
03-ஜூலை-202115:38:37 IST Report Abuse
Loganathaiyyan கோளாறு (கேரளா), வொர்ஸ்ட் (வெஸ்ட்) பெங்கால் இடங்களில் பி ஜெ பி என்றால் உடனே என் எதிரே தும்மினான் தும்மி கொரோனவை பரப்புகின்றான் என்று கூட வழக்கு போடப்படும் என்பதை இந்த மாதிரி வழக்கு மிக துல்லியமாக காண்பிக்கின்றது
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
03-ஜூலை-202114:39:44 IST Report Abuse
sahayadhas கேரளாவில் 4 கோடிக்கு யாராவது வீடு கட்டு ராங்களா? எவ்வளவு கோடி,, டேய் Petrol ல 1 ரூ குறையுங்க'. ஹிந்துதானி என்ன பாவம் பண்ணுனா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X