பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்வமாக வந்த மக்கள்: ஆனால் தடுப்பூசி இல்லை

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
வால்பாறை; வால்பாறை நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஒரு வாரத்துக்கு பின் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.வால்பாறை நகர், முடீஸ், உட்பிரியார், பாரிஆக்ரோ, சோலையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில், 1,140

வால்பாறை; வால்பாறை நகரில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஒரு வாரத்துக்கு பின் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.



latest tamil news




18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.வால்பாறை நகர், முடீஸ், உட்பிரியார், பாரிஆக்ரோ, சோலையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில், 1,140 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. வால்பாறை நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அரசு மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து, காலை, 7:00 மணி முதல், மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.ஆனால், 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்ட நிலையில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பல மணி நேரம் காத்திருந்தும், தடுப்பூசி போட முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகருக்கு அதிகமான அளவில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி ஒதுக்கீடுக்கு ஏற்ப, தவணை முறையில் அனைவருக்கு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


latest tamil news




ஆனைமலை கோட்டூரில் கடந்த, ஒரு மாதமாக அவ்வப்போது தடுப்பூசி முகாம் நடத்தியதில் ஒவ்வொரு முறையும், 400 முதல் 500 பேர் வரையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள், முன்கள பணியாளர்கள் பலருக்கும் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, நேற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து, தடுப்பூசி போடும் முகாம் நடத்தினர். இதில், முன்கள பணியாளர்கள், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு, முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம், 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கிணத்துக்கடவு அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமில், அரசம்பாளையம், காரச்சேரி மற்றும் வெளியூர்களை சேர்ந்த, மாற்றுத்திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர் என, 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
04-ஜூலை-202102:20:11 IST Report Abuse
BASKAR TETCHANA எநிதி உறுப்பிடாத உதயநிதி போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகம் தேறாது. கோரோனோவுக்கு மத்திய அரசு எவ்வளோவோ ஊசிகள் மருந்துகள் அனுப்பி உள்ளன எல்லாம் எங்கே போகிறது. காவேரி மருத்துவமனை இவர்கள் நண்பர்கள் நடத்தும் தனியார் மறுத்துவமனைகளுக்கு நல்ல விலைகளுக்கு விற்று விடுகின்றனர்.பாவம் மக்கள் வெயிலும் மழையும் என்று கால் கடுக்க நின்று விட்டு ஊசி இல்லை என்றதும் வீடு திரும்புவார்கள். இதை சாம்பார் முதல்வர் ஸ்டாலின் தட்டி கேட்க மாட்டார். அவருக்கு தேவை கமிஷன். ஏழைகளின் வயிற்றெல்லை எரிச்சலை கொட்டி கொள்ளாதீர்கள்.
Rate this:
Cancel
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
03-ஜூலை-202120:25:24 IST Report Abuse
பிஞ்சதலையன் அரசாங்கம் ஆர்வமா கூவசொல்லோ இவனுக ஊரார் பேச்சை கேட்டு ஊசி போட்டுக்க வரல்ல இப்போ அவங்களே போட்டுக்குங்கன்னு சொல்றாங்க ஆனா ஊசி ஸ்டாக் இல்லை எல்லாமே demand and supply கணக்கு தான்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
03-ஜூலை-202117:19:06 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கோவை மற்றும் அருகில் உள்ள மக்கள் சந்தோசமாக இல்லையோ தர் போதுள்ள சூழ்நிலையில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X