சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீடா வியாபாரி போல வேடமிட்டு கொள்ளையரை பிடித்த போலீசார்

Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஏ.டி.எம்.,களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க, பல மாநில போலீசார் தீவிர முயற்சி எடுத்த நிலையில், ஹரியானா மாநிலத்திற்கு சென்ற தமிழக தனிப்படை போலீசார், இளநீர், பீடா வியாபாரி போல வேடமிட்டு, கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ளனர்.விசாரணைசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், எஸ்.பி.ஐ., வங்கியின், பணம்
பீடா வியாபாரி, வேடம், கொள்ளையர்,  போலீசார்,

சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஏ.டி.எம்.,களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க, பல மாநில போலீசார் தீவிர முயற்சி எடுத்த நிலையில், ஹரியானா மாநிலத்திற்கு சென்ற தமிழக தனிப்படை போலீசார், இளநீர், பீடா வியாபாரி போல வேடமிட்டு, கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ளனர்.


விசாரணை


சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், எஸ்.பி.ஐ., வங்கியின், பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள, ஏ.டி.எம்., மிஷின்களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இதே கும்பல், நாட்டின் பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும், டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநில போலீசார், கொள்ளையர்களை தேடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.


latest tamil news


இதையடுத்து, தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார், ஹரியானா மாநிலத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அமீர், 37; வீரேந்திர ராவத், 23; நஜிம் உசேன், 25 மற்றும் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலி, 25 ஆகியோரை சமீபத்தில் கைது செய்தனர்.இவர்களில், முதலில் சிக்கிய மூவரை, சென்னைக்கு அழைத்து வந்த தமிழக போலீசார், அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil newsசவால்


இந்நிலையில், கொள்ளையர்கள் சிக்கிய விதம் குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:கொள்ளை நடந்த இடங்களில் கிடைத்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை படமாக்கி, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பினோம். விமான நிலைய, சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து, கொள்ளையர்கள், ஹரியானா மாநிலம், மேவாட் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தோம்.

அங்கு சென்றதும், பல்லப்கர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 75 சதவீத இளைஞர்கள், நுாதன கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.தமிழகத்தில், சவுகத் அலி, சஹதப் கான் என்ற இருவரின் தலைமையில், கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதை உறுதி செய்தோம். இவர்களை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.

ஊர் மக்கள், கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டனர். எங்களை ஊருக்குள் நுழைய விடவில்லை. எங்களை தாக்கவும் முயன்றனர். இதனால், முயற்சியை கைவிட்டு, சென்னைக்கு திரும்பியது போல, மாயத்தோற்றத்தை உருவாக்கினோம்.இளநீர் வியாபாரி, பீடா வியாபாரி போல வேடமிட்டு, தேடுதலில் ஈடுபட்டோம். பீடா கடைக்காரர் ஒருவர், சக வியாபாரி என கருதி கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவித்தார்.அப்படித்தான், ஊரை விட்டு வெளியேறிய, எம்.காம்., பட்டதாரியான அமீரை முதலில் பிடித்தோம். பின், வீரேந்திர ராவத், நஜிம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சவுகத் அலியை பிடிப்பது கொஞ்சம் சவாலாக இருந்தது. அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன், இந்த கொள்ளையர்களை பிடித்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


கொள்ளையர்களின் கொள்கை!

போலீசில் பிடிபட்ட கொள்ளையர்கள் அளித்த வாக்குமூலம்:ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளையடித்த பணத்தை, மது, மாது, சூது என, எந்த பழக்கத்திற்காகவும் இழக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. கிடைத்த பணத்தை பங்கிட்டு, வசதியான வாழ்க்கை வாழவே விரும்பினோம்.பெரிய சொகுசு வீடு, நிலம், வாகனங்கள், கால்நடைகள் வாங்கவே, அந்த பணத்தை பயன்படுத்துவோம்.இவ்வாறு கொள்ளையர்கள் கூறினர்.


5 நாள் போலீஸ் காவல்


முடிச்சூர், ஏ.டி.எம்., கொள்ளை தொடர்பாக விசாரிக்க, நஜிம் உசேனை,ஏழுநாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, பீர்க்கன்காரணை போலீசார், தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சஹானா, நஜிம் உசேனை, ஐந்துநாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
04-ஜூலை-202100:10:53 IST Report Abuse
SUBBU பிடித்து என்ன பிரயோஜனம்?அவர்கள் கொள்ளையடித்த பணம் மீட்கப் பட்டதா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
03-ஜூலை-202117:29:07 IST Report Abuse
M  Ramachandran தமிழ் நாட்டில் போலீசில் ஹிந்தி தெரிந்தவர்கள் எப்படி? விரோதியின் மொழி நம் விரோதியாக பாவிக்க வேண்டும்.இந்தி எதிர்ப்புக்காக பல கேடயங்களும் பரிசுகளும் வீர தழும்பும் ஏந்திய மறவர்கள் உள்ள நாட்டில் இந்தி மொழியா?எங்கெ அந்த ஓசிசோறு இப்போது கமுக்கமாக இருப்பதின் மர்மம் என்ன? ஏதாவது தலையில் கூட்டு வீழுந்ததா? ஓகோ அப்படியும் இருக்கலாம் கட்சி சாப்புல்ல பெரும்புள்ளிகளால் நடத்த படும் சிறப்பு பள்ளிகளில் தேர்ச்சி பெற்று போலிஸில் சேர்த்திருப்பார்கள் போல
Rate this:
Cancel
03-ஜூலை-202117:09:53 IST Report Abuse
தென்றல் JAIHIND மோடி ஒயிக மோடி ஒயிக! என்ன ஒரு சத்தத்தையும் காணோம்??? மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஒரு சிறு வங்கிக்கொள்ளை கூட செய்ய உரிமையில்லையா? # TN உபிஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X