நீட் ஆய்வுக்குழு அமைத்ததில் நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை: தமிழக அரசு

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (21)
Advertisement
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய, ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதில், நீதிமன்றங்களின் உத்தரவுகள் மீறப்படவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் சென்னை
NEET exam, medical entrance test, நீட், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய, ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதில், நீதிமன்றங்களின் உத்தரவுகள் மீறப்படவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.



நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், 'நீட்' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு நியமித்துள்ள குழு பற்றி விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் பெறப்பட்டதா என, கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிடடது.

இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: மாணவர், பெற்றோர் என்ற முறையில் இல்லாமல், பா.ஜ., பிரமுகர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தது விளம்பர நோக்கத்திற்காக. அரசு பள்ளி மாணவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராயவே ஏ.கே.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. நீட் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதல் நீதிமன்றங்களின் உத்தரவுகள் மீறப்படவில்லை. நீட் பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news




திமுக மனு


இந்த வழக்கில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசு முடிவெடுக்காத நிலையில் ஏகே ராஜன் குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட பா.ஜ.,வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Ghisin,கோஸ்டாரிகா
03-ஜூலை-202122:10:32 IST Report Abuse
Sri பொதுநல வழக்கு யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் .அரசு பதில் மனு அபத்தமாக உள்ளது..கலைஞர் சமாதி பொதுநலமா? மெரீனா எல்லோருக்கும் பொது என்ற பொழுது எப்படி திராவிட கட்சி‌தலைவர்களுக்கு மட்டும் பட்டா போடப்படுகிறது,...ஜட்ஜ்கள்‌நிலை தடுமாறாமல் நீதி நிலை நாட்ட வேண்டும்
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூலை-202121:11:17 IST Report Abuse
Ganesh தமிழில் படித்ததால் தான் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுதமுடியவில்லை என்று ராஜன் குழுவினர் சொல்வார்கள். இது ஆளும் கட்சியின் ஏற்பாடு. உடனே தமிழை பாஜக எதிர்க்கிறது என்று நாடகம் அரங்கேறும். ஆதிக்க சக்திகள் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு மக்களை திசைதிருப்பும் தந்திரம் இது
Rate this:
Indianதமிழன் - chennai,இந்தியா
03-ஜூலை-202122:52:21 IST Report Abuse
Indianதமிழன்நீட் தேர்வை தமிழில் எழுத முடியுமே ...தமிழ் வழியில் படித்தவர்களை எப்படி பாதிக்கும்? அவ்வாறு பாதிப்பதாக கருதினால் அவர்களை முன்னேற்ற ஒரு கல்விக் குழு அல்லவா தேவை?...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
03-ஜூலை-202121:00:11 IST Report Abuse
sankar அரசின் பதிலில் - மழுப்பால்தான் இருக்கிறது - நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை - இது ஒன்றும் "ஆய்த எழுத்து" இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X