பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மற்றும் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் 9 மாவட்டங்களில் இன்று (ஜூலை 03) இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை:இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக,இன்று(ஜூலை 3) நீலகிரி, சேலம், தர்மபுரி,
தமிழகம், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை வானிலை மையம், கனமழை, மழை, இடி, மின்னல், புவியரசன், வானிலை மையம்,

சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் 9 மாவட்டங்களில் இன்று (ஜூலை 03) இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை:இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக,


இன்று(ஜூலை 3)

நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்


ஜூலை04

சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


ஜூலை 05

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, திண்டுக்கல், கோவை, தேனி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.


latest tamil news




ஜூலை 06 மற்றும் 07

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்


சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மற்றும் செஞ்சியில் - 7 செ.மீ.,
விழுப்புரம் மாவட்டம் வானூரில் - 6 செ.மீ.,
மகாபலிபுரம், மரக்காணம், விழுப்புரத்தில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை


வங்கக்கடல் பகுதிகளில், ஜூலை 03 முதல் 04 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசும்.
அரபிக்கடல் பகுதியில் ஜூலை 03 முதல் 07 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
03-ஜூலை-202117:21:55 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே மழையால் வரும் நீரை கடலுக்கு அனுப்பி வைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் மணல் திருடர் கழகம் செய்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X