உத்தரகண்ட் முதல்வராகிறார் புஷ்கர் சிங்

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகண்ட் மாநில முதல்வராக, புஷ்கர் சிங் தாமி, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.2017ல் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., வெற்றி பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். உட்கட்சி பூசலால், கடந்த மார்ச்சில் தன் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா எம்.பி.,யான தீரத் சிங் ராவத், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக
uttarkhand, ChiefMinister,Pushkar Singh Dhami, Uttarakhand, BJP, உத்தரகண்ட், பாஜ, முதல்வர், புஷ்கர் சிங்,

டேராடூன்: உத்தரகண்ட் மாநில முதல்வராக, புஷ்கர் சிங் தாமி, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

2017ல் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., வெற்றி பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். உட்கட்சி பூசலால், கடந்த மார்ச்சில் தன் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா எம்.பி.,யான தீரத் சிங் ராவத், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்தது. உத்தரகண்ட் மாநில பா.ஜ.,விலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அடுத்தாண்டு, உத்தரகண்டில் சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த ராவத், பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். தொடர்ச்சியாக, முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.


latest tamil news


இந்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டேராடூனில் நடந்தது. இந்த கூட்டத்தில், கதிமா தொகுதி எம்.எல்.ஏ.,வான புஷ்கர் சிங் தாமி(45), புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கதிமா தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக இரு முறை தேர்வு செய்யப்பட்ட புஷ்கர் சிங், பா.ஜ.,வின் இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களில், உத்தரகண்ட் மாநிலத்தில் 3வது முதல்வர் பதவியேற்க உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-ஜூலை-202119:21:55 IST Report Abuse
பாமரன் வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்... 🎉ஆனால் பாஸ்... சென்ற முதல்வர் நாலு மாசம் இருந்தாலும் நிறைய எண்டர்டெயின்மெண்ட் குடுத்தார்... டூரிஸம் டவுனா இருக்கும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் உத்தரகண்ட் மக்களின் நகைச்சுவை உணர்வு நல்லாத்தான் வச்சிருந்தார்... அவரை ஓவர்டேக் பண்ணனும்... இல்லைன்னா எங்க ஆட்சிக்கலைப்பு பெஷலிஸ்ட் இரும்பு மனிதர்ஜி வச்சி அடுத்த ஆபரேஷன் பண்ணிடுவோம்... நம்ம கட்சிதானேன்னு அலட்சியமா இருக்காதீங்க... எண்டர்டெயின்மெண்ட் முக்கியம் பாஸ்...🤭🤭
Rate this:
Cancel
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
03-ஜூலை-202118:26:54 IST Report Abuse
R PURUSHOTHAMAN In 4 months, 3rd cm - best wishes, bjp ki jai ho.......good achievement.......
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-202116:51:34 IST Report Abuse
செல்வம் இந்த குடும்ப கட்சி கொத்தடிமைகள் உடைநிதி இன்பநிதி கால்ல விழுந்து கிடப்பானுங்க. ஹிஹிஹி..கேட்டா இது இன்னா சங்கர மடமான்னி மடத்தனமா நம்மையே மடக்குவானுங்க இந்த புத்தி கெட்ட நாசகார கும்பல்..இது பிஜெபிடா.. உழைத்தால் உயரலாம் .. உங்களை போல காலம்பூரா போஸ்டர் ஒட்டிகினு க்வாட்டர் குடிச்சிகினு ஓசி பிரியாணிக்கு அலீர கூட்டம் இல்லைடா வேஸ்ட் லாண்ட்ஸ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X