பஞ்சாபில் தொடரும் மின்தடை: முதல்வர் வீடு முன் ஆத்மி போராட்டம்

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மொகாலி: பஞ்சாபில், மின் தடையை கண்டித்து, முதல்வர் அமரீந்தர் சிங் வீடு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.பஞ்சாப் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவும் சூழ்நிலையில், மின்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.ஒரு நாளின் மின்சார தேவை, 14 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அவ்வளவு மின்சாரம் உற்பத்தி இல்லாததால், அங்கு
Water Cannons, AAP, Workers, Protest, Amarinder Singh,

மொகாலி: பஞ்சாபில், மின் தடையை கண்டித்து, முதல்வர் அமரீந்தர் சிங் வீடு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவும் சூழ்நிலையில், மின்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.ஒரு நாளின் மின்சார தேவை, 14 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அவ்வளவு மின்சாரம் உற்பத்தி இல்லாததால், அங்கு அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால், மாநில அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனையடுத்து, அரசு அலுவலகங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளதுடன், அதிக மின்நுகர்வு செய்யும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில், மின்தடையை கண்டித்து, மொகாலியில் அமரீந்தர் சிங் வீடு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாநில தலைவர் பகவத் மன் தலைமையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினர். பகவத் மன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். ஆம் ஆத்மியினர் போராட்டத்தை தொடர்ந்து முதல்வர் வீடு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சி உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



கடந்த வெள்ளிக்கிழமை, முதல்வருக்கு எதிராக, அங்கு முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் போராட்டம் நடத்தியிருந்தது. விவசாயிகளுக்கு 8 மணி நேரம் இலவச மின்சாரம் தருவதாக அறிவித்த முதல்வர் தற்போது, திட்டமிடப்படாமல் அடிக்கடி மின்வெட்டை அமல்படுத்துவதாகவும், தொழிற்சாலைகளை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மூடவும் உத்தரவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-ஜூலை-202112:22:48 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் டுமீல் நாட்டுல இதை செய்ய தெகிரியம் கீதா ?
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூலை-202108:48:43 IST Report Abuse
Saravanan கூட்டணி தர்மத்தினை காக்க இங்கிருந்து அணிலை அனுப்புங்கள், அதிலும் டபுள் வாட்ச் மந்திரியிடம் ஆலோசனை கேட்டு அமெரிக்கா அணிலை அனுப்பி வையுங்கள்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஜூலை-202108:44:51 IST Report Abuse
blocked user பஞ்சாப்பிலும் அணில்க்குஞ்சா? அக்கிரமமாக இருக்கிறதே. வேண்டுமென்றே தமிழகத்தை காப்பி அடித்து அணிலகள் அட்டகாசம் செய்வது போலத்தெரிகிறது. அடுத்து மேற்கு வங்கத்துக்கு அணில் போகும் என்று எதிர்பார்க்கலாம். அத்தனையும் மானங்கெட்ட பயல்களாக இருந்தால் என்னதான் செய்ய முடியும். ஆண்டவன் விட்ட வழிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X