பஞ்சாபில் தொடரும் மின்தடை: முதல்வர் வீடு முன் ஆத்மி போராட்டம்| Dinamalar

பஞ்சாபில் தொடரும் மின்தடை: முதல்வர் வீடு முன் ஆத்மி போராட்டம்

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (10)
Share
மொகாலி: பஞ்சாபில், மின் தடையை கண்டித்து, முதல்வர் அமரீந்தர் சிங் வீடு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.பஞ்சாப் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவும் சூழ்நிலையில், மின்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.ஒரு நாளின் மின்சார தேவை, 14 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அவ்வளவு மின்சாரம் உற்பத்தி இல்லாததால், அங்கு
Water Cannons, AAP, Workers, Protest, Amarinder Singh,

மொகாலி: பஞ்சாபில், மின் தடையை கண்டித்து, முதல்வர் அமரீந்தர் சிங் வீடு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவும் சூழ்நிலையில், மின்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.ஒரு நாளின் மின்சார தேவை, 14 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அவ்வளவு மின்சாரம் உற்பத்தி இல்லாததால், அங்கு அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால், மாநில அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனையடுத்து, அரசு அலுவலகங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளதுடன், அதிக மின்நுகர்வு செய்யும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில், மின்தடையை கண்டித்து, மொகாலியில் அமரீந்தர் சிங் வீடு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாநில தலைவர் பகவத் மன் தலைமையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினர். பகவத் மன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். ஆம் ஆத்மியினர் போராட்டத்தை தொடர்ந்து முதல்வர் வீடு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சி உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



கடந்த வெள்ளிக்கிழமை, முதல்வருக்கு எதிராக, அங்கு முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் போராட்டம் நடத்தியிருந்தது. விவசாயிகளுக்கு 8 மணி நேரம் இலவச மின்சாரம் தருவதாக அறிவித்த முதல்வர் தற்போது, திட்டமிடப்படாமல் அடிக்கடி மின்வெட்டை அமல்படுத்துவதாகவும், தொழிற்சாலைகளை வாரத்திற்கு இரண்டு நாட்கள் மூடவும் உத்தரவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X