பொது செய்தி

தமிழ்நாடு

'இண்ட்கோசர்வ்'க்கு நியாய வர்த்தக சான்றிதழ்

Added : ஜூலை 03, 2021
Share
Advertisement
இந்தியாவிலேயே முதன் முறையாக, அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்பான, 'இண்ட்கோசர்வ்' நிறுவனம் பெற்றுள்ள நியாய வர்த்தக சான்றிதழை, அதிகாரிகள் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.நாட்டின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக, 'இண்ட்கோசர்வ்' தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தில், 16

இந்தியாவிலேயே முதன் முறையாக, அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்பான, 'இண்ட்கோசர்வ்' நிறுவனம் பெற்றுள்ள நியாய வர்த்தக சான்றிதழை, அதிகாரிகள் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

நாட்டின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக, 'இண்ட்கோசர்வ்' தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், உறுப்பினர்களாக உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக, 1.4 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்து, நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும், முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிறுவனத்திற்கு, ஜெர்மனி நாட்டின், பான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ப்ளோசர்ட்' நிறுவனம், நியாய வர்த்தக சான்றிதழ் வழங்கி உள்ளது. இதை, இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுப்ரியாசாஹு, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய், தொழில் ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X