சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எங்கே நிம்மதி!

Added : ஜூலை 03, 2021
Share
Advertisement
எங்கே நிம்மதி!'தப்பான களத்தில் கால் வைத்து விட்டோமோ...' என, கவலைப்படுகிறார் கேரள மாநில சுகாதார அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான வீணா ஜார்ஜ்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயனின் முந்தைய ஆட்சி காலத்தில், சைலஜா என்பவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். கொரோனாவை

அக்கம் பக்கம்


எங்கே நிம்மதி!



'தப்பான களத்தில் கால் வைத்து விட்டோமோ...' என, கவலைப்படுகிறார் கேரள மாநில சுகாதார அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான வீணா ஜார்ஜ்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயனின் முந்தைய ஆட்சி காலத்தில், சைலஜா என்பவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாக, கேரள மக்களால் பாராட்டப்பட்டார்; ஐ.நா.,வும் இவரை பாராட்டியது. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தும், சைலஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
பத்திரிகையாளரான வீணா ஜார்ஜ் சுகாதார அமைச்சராக பதவியேற்றார். துவக்கத்தில் உற்சாகத்துடன் பணியாற்றிய வீணா, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களால் விரக்தி அடைந்துள்ளார்.'தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. தொற்று மீண்டும் அதிகரிக்கிறது' என, தினமும் ஒரு பிரச்னையை எழுப்பி, வீணாவை படுத்தி எடுக்கின்றன எதிர்க்கட்சிகள்.

பொதுமக்களோ, 'சைலஜா அளவுக்கு வீணாவுக்கு திறமை இல்லை' என்கின்றனர். இதனால், 'அமைச்சர் பதவியை ஏற்காமல், எம்.எல்.ஏ.,வாகவே இருந்திருக்கலாம். கொரோனா முடிவுக்கு வந்தால் தான், எனக்கு நிம்மதி' என, சோகத்துடன் கூறுகிறார் வீணா ஜார்ஜ்.


காது... கேட்காது!



'அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை, 'சீரியசாக' நினைத்தால் நம்மை போல ஏமாளிகள் யாரும் இல்லை' என, விரக்தியுடன் பேசுகின்றனர் சத்தீஸ்கர் மாநில மக்கள். இந்த மாநிலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு முன், பா.ஜ., தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்தது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது காங்கிரஸ். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்றனர்.

அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது; பூபேஷ் பாகேல் முதல்வர் பதவியில் அமர்ந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் ஒரு சில மாதங்களில் நிறைவேற்றுவோம்' என, உறுதி அளித்தார். ஆனால் பூபேஷ் பாகேல் முதல்வராக பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர் எந்த நிகழ்ச்சிக்கு, எந்த ஊருக்கு சென்றாலும், 'மது விலக்கு வாக்குறுதி என்னாச்சு' என, பத்திரிகையாளர்கள் கேட்பதும், அதற்கு பதில் சொல்லாமல் அவர் நழுவுவதும் வழக்கமாக உள்ளது.

சத்தீஸ்கர் மாநில காங்., பிரமுகர்களோ, 'தேர்தல் பிரசாரத்தின் போது மட்டுமே எங்கள் காதுகள் கேட்கும்; அதற்கு பின் செவிடாகி விடும். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான்' என, கிண்டலாக பேசுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X