சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொழிலுக்காக கடலூரில் வங்கதேச பெண்கள் தங்கவைப்பு

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 03, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
கடலுார்:கடலுாரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள், விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது. கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டை, நேற்று முன்தினம் மத்திய உளவு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து, வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட

கடலுார்:கடலுாரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள், விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது.



latest tamil news


கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் கற்பக விநாயகர் நகரில் உள்ள வீட்டை, நேற்று முன்தினம் மத்திய உளவு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து, வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட வீட்டில் வசித்தவர்களுக்கு அடிக்கடி சர்வதேச போன்கால் அழைப்பு வந்ததால், தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

அந்த வீட்டில், நாஜ்மூர் ஷித்தர்,35; அவரது மனைவி பரிஜா பீவி, 25; மற்றும் ஷக்தர் முல்லா, 50; பாபுஷேக், 22; பாத்திமா 25; 3 வயதில் சிறுவன் என, 2 பெண்கள் உட்பட 6 பேர் இருந்தனர்.
அவர்களுக்கு இந்தி மொழி மட்டுமே தெரிந்ததால், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அழைத்து சென்று, மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.


latest tamil news



பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர். கொல்கத்தா விலாசத்தில் ஆதார் அட்டை மட்டுமே அவர்களிடம் உள்ளது. மேலும், அவர்கள் கொல்கத்தாவில் இருந்து அழைத்து வந்து கடலுார் தங்க வைக்கப்பட்டு, கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்லைன் மூலம் விபசார தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
அதையடுத்து, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து, முக்கிய புரோக்கராக செயல்பட்ட ஷக்தர் முல்லா உள்ளிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு கடலுாரில் வீடு எடுத்து தங்க வைத்து, அவர்களை புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விபசார தொழிலில் ஈடுபடுத்திய முக்கிய புரோக்கர்களாக, கவின் (எ) சங்கர், தனுசு ஆகியோர் செயல்பட்டது தெரியவந்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கிடுக்கிப்பிடி விசாரணை

மேலும், ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரிடம், மத்திய உளவு பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக நேற்றும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வங்கதேசத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி வந்தது எப்படி, அவர்களுடன் தீவிரவாத தொடர்பு ஏதாவது உள்ளதா, எந்த நோக்கத்திற்காக தங்கியுள்ளனர்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் உள்ளூரில் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார், தொலைபேசியில் யார் யாருடன் பேசியுள்ளனர் போன்ற பல்வேறு கோணங்களில் விபரங்களை சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூலை-202119:31:16 IST Report Abuse
J.V. Iyer தமிழகமும், வங்கமும் ஒன்று சேர்ந்தால் என்னென்னவோ நடக்கும்.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
06-ஜூலை-202118:26:26 IST Report Abuse
Hari கஷ்ட்டகாலம் தமிழகத்திற்கு
Rate this:
Cancel
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
05-ஜூலை-202112:46:19 IST Report Abuse
KALIHT LURA இதன் பின்னணி யில் இருப்பவர்கள் யார். இவர்களை கடலூரில் தங்க வைத்தது யார் போன்ற தகவல்கள் தெரிய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X