பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பில்., படிப்பை நடத்துவதா; வேண்டாமா? ; அரசின் உத்தரவால் பல்கலைகள் குழப்பம்!

Updated : ஜூலை 04, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசின் மாறுபட்ட அறிவிப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பால், எம்.பில்., படிப்பை நடத்துவதா, வேண்டாமா என, பல்கலைகள் குழப்பம் அடைந்துள்ளன. படிப்பை நடத்தினால், தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி

சென்னை : தமிழக அரசின் மாறுபட்ட அறிவிப்பு மற்றும் புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பால், எம்.பில்., படிப்பை நடத்துவதா, வேண்டாமா என, பல்கலைகள் குழப்பம் அடைந்துள்ளன. படிப்பை நடத்தினால், தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி கொள்கைப்படி, எம்.பில்., படிப்புக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதைப் பின்பற்றி பல மாநிலங்கள், எம்.பில்., படிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.


latest tamil news




ஆலோசனை


தமிழகத்தில், சென்னை பல்கலையில் நடந்த, உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டத்திலும், எம்.பில்., மாணவர் சேர்க்கையை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், எம்.பில்., படிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக அரசு, புதிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், தமிழகத்தில் எம்.பில்., படிப்பை நிறுத்தினால், புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டதாகி விடும் என, அதிகாரிகள் மத்தியில் கருத்துகள் பரிமாறப்பட்டன. இதையடுத்து, 'எம்.பில்., படிப்பு நிறுத்தப்படாது; சென்னை பல்கலை உட்பட, அனைத்து பல்கலையிலும் தொடரும்' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்து உள்ளது.


பணி நியமனம்

இதுபற்றி, பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள் கூறியதாவது: ஏற்கனவே, எம்.பில்., படித்து முடித்தவர்களுக்கு, உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் இல்லை. ஆராய்ச்சிக்கான உதவி தொகையும் கிடைப்பதில்லை. 'நெட், செட்' தேர்வில் தேர்ச்சி மற்றும் பிஎச்.டி., படிப்புகளின் அடிப்படையிலேயே, உதவி பேராசிரியர் பதவிகளுக்கு, பணி நியமனம் நடக்கிறது. தற்போதைய நிலையில், எம்.பில்., படிப்பில் சேர்வது, அதற்கு கட்டணம் செலுத்துவது என, அதற்கான காலமும், செலவும் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு உதவியாகஇருக்காது.


latest tamil news



இந்த காலகட்டத்தில், பிஎச்.டி., படித்தாலாவது, அது பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்குஉதவும். மேலும், யு.ஜி.சி.,யின் உத்தரவுகளை பின்பற்றினால் மட்டுமே, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பேராசிரியர்களுக்கான சம்பளம், ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்டவைபல்கலைகளுக்கு கிடைக்கும். தமிழக பல்கலைகள், ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால்,யு.ஜி.சி., உத்தரவை மீறி, எம்.பில்., படிப்பை நடத்தும் போது, யு.ஜி.சி.,யின் நிதியுதவி பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
04-ஜூலை-202117:40:30 IST Report Abuse
Loganathaiyyan இதிலே என்னய்யா குழப்பம் முனைவர் பட்டத்துக்கு முன்னாள் உள்ளது தான் எம் பில் இதற்கு ஒரே தீர்வு யார் யார் எம் பில் எடுத்து படித்துக்கொண்டிருக்கின்றார்களோ அவர்களை முனைவர் - பி எச் டி - முனைவர் பட்டத்த்துக்கு தகுதியானவர்கள் அவர்கள் இன்னும் 3 வருடம் படித்தால் (ஆராய்ச்சிக்கட்டுரை ...................வழிகாட்டுதல்.....) அதாவது மொத்தம் 5 வருடங்கள் முனைவர் பட்டம் கிடைக்கும் என்று சிறிய மாற்றம் செய்தால் போதும். உ.ம் டிப்ளமோ படித்தவன் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு சேர்வது போல
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-ஜூலை-202116:56:25 IST Report Abuse
vbs manian இந்த எம் பில் ஒரு ரெண்டுங்கெட்டான். திரிசங்கு . எதற்கும் உபயோகப்படாது. நிஜமாகவே பயன் வேண்டுமென்றால் பி எச் டி டிகிரி வாங்க வேண்டும். இந்த உருப்படாத ஒன்றை கொண்டு நிறைய பேரை குழப்பிவிட்டார்கள். பல புத்திசாலி மாணவர்கள் ஸ்தம்பித்து போய் விட்டார்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
04-ஜூலை-202113:25:16 IST Report Abuse
S.Baliah Seer முதலில் M.Phil, P.hD என்ற பெயர்களே தப்பு.இந்த இரண்டையுமே ஒழிக்க வேண்டும் . அவரவர்கள் பாடத்தில் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.நான் உளவியலில் M.Phil. அத்துடன் அதில் Psy.D.அதாவது அதில் டாக்டர் பட்டம்.அதை யாரும் தமிழில் முனைவர் என்று அழைக்க முடியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X