'சீனாவுக்கு வந்து பாருங்க': சீன் போடும் 'தீபா'

Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
காந்த கண்ணழகி, களையான முகத்தழகி, முந்திரி மூக்கழகி, முறுவலிக்கும் பல்லலகி, வானவில் புருவழகி, வண்ணநிலா பொட்டழகி, சிக்கன சிரிப்பழகி, இணைய வழி இளசுகளை ஏங்க வைக்கும் பச்சைக்கிளி, பட்டுக்கோட்டை பேரழகி தான் தீபா... நடிகை தீபாவே தான். தினமலர் வாசகர்களுக்காக அவர் பேசியது.உங்களைப் பற்றிபிறந்தது, வளர்ந்தது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்துார். சீனாவில்
'சீனாவுக்கு வந்து பாருங்க': சீன் போடும் 'தீபா'

காந்த கண்ணழகி, களையான முகத்தழகி, முந்திரி மூக்கழகி, முறுவலிக்கும் பல்லலகி, வானவில் புருவழகி, வண்ணநிலா பொட்டழகி, சிக்கன சிரிப்பழகி, இணைய வழி இளசுகளை ஏங்க வைக்கும் பச்சைக்கிளி, பட்டுக்கோட்டை பேரழகி தான் தீபா... நடிகை தீபாவே தான். தினமலர் வாசகர்களுக்காக அவர் பேசியது.


உங்களைப் பற்றிபிறந்தது, வளர்ந்தது


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்துார். சீனாவில் டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன். கொரோனாவால் 2020ல் சொந்த ஊருக்கு வந்தேன். கொரோனா போனாதான் திரும்பவும் சீனாவுக்கு போயி என்னோட படிப்பை தொடர முடியும். இப்ப... ஆன்லைன் கிளாஸ் போயிட்டு இருக்கு.


நடிக்க வாய்ப்பு


எனக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்கும். நடிக்கவும் பிடிக்கும். பள்ளியில் எந்த போட்டியிலும் முதல்ஆள் நானாகத்தான் இருப்பேன். பரதநாட்டியம் நல்லா பண்ணுவேன். நெறைய பரிசும் வாங்கியிருக்கேன். எட்டு மாதங்களுக்கு முன்பு 'நாக் அவுட்' யூ டியூப் சேனலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் பார்ட் டைம் ஜாப் மாதிரிதான். வீட்ல தடைசொல்லாததால், நடிக்க நடையை கட்டிட்டேன்.


நடித்த குறும்படங்கள்


'டைப்ஸ் ஆப் கேர்ள்ஸ் புரோபசல்', '2கே காதலி', 'நெஞ்சாத்தியே' வெப் சீரிஸ், சிவகார்த்திகேயன் எழுதிய 'செல்லம்மா' பாடலுக்கு கவர் சாங் வீடியோ, 'இதயத்தை திருடாதே' டிவி சீரியலில் நடிச்சிருக்கேன். சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வருது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.


நிஜத்தில் காதல்


காதல் இல்லாத யாராவது இருக்காங்களா என்ன. அழகான பொண்ணுக்கு காதல் தொல்லைகள் இல்லாமல் இருக்குமா. நெறைய காதல் கடிதங்கள் வந்திருக்கு. ஆனா, எனக்கு விருப்பம் இல்லைனு சொல்லிடுவேன். நமக்கு படிப்புதான் முக்கியம். டாக்டராகணுங்குறது தான் என்னோட கனவு. அதுக்குதானே, சீனாவுல போயி படிக்கிறேன்.


ரசிகர்கள் லைக்ஸ்


எங்களுடைய குறும்படங்களுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. புதுசா எந்த வீடியோ போட்டாலும் ரசிகர்கள் அன்பை 'லைக்ஸ்' ஆக அள்ளிப்போடுறாங்க. என்னுடைய குடும்பத்தினர் என் நடிப்பை பார்த்துட்டு ரொம்பவே பாராட்டுனாங்க. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்கன்னு நினைச்சா சந்தோஷமா இருக்குது.


சீனா அனுபவம்


இந்தியாவில் 'மெரிட்'டில் டாக்டருக்கு சீட் கிடைக்காததால் சீனாவுக்கு போனேன். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. தெரியாத நாடு. தெரியாத மொழி. 6 மாதத்தில் சீன மொழி கத்துக்கிட்டேன். இப்போ பழகிடுச்சு, பயமும் போயிடுச்சு.


பிடித்த சீன உணவு


தவளைக் கறி, பாம்பு கறின்னு சொல்ல மாட்டேன். நுாடுல்ஸ்தான் ரொம்ப பிடிக்கும். நம்ம ஊருல கிடைக்காத நுாடுல்ஸானு நினைக்க வேண்டாம். ஒரு முறை சீனா வந்து சாப்பிட்டு பாருங்க. உங்களுக்கும் புடிக்கும்.
-சிவன்

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
06-ஜூலை-202106:49:54 IST Report Abuse
Sai நம்ம ஊருல கிடைக்காத நுாடுல்ஸானு நினைக்க வேண்டாம். ஒரு முறை சீனா வந்து சாப்பிட்டு பாருங்க. உங்களுக்கும் புடிக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இதுல உலகமே நம்மை வியந்து பாக்குது இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதுன்னு மன் கி துரோகம் வேறே இந்திய திரு நாட்டில் வேரோடும் வேரடி மண்ணோடும் இருந்த சுவடே தெரியாமல் களைந்தெறியப் பட்டவை மன சாட்சியும் பொறுப்புணர்வும் கள்ள காதலுக்காக பெற்ற பிள்ளையை கொல்லும் தாய்மார்கள் பெருகும் நாட்டில் "நாட்டுப் பற்று கோஷம்" ஒரு கேடா?
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
06-ஜூலை-202111:55:59 IST Report Abuse
கல்யாணராமன் சு.mixed நூடுல்ஸ் மாதிரியே நீங்களும், உங்களுடைய எண்ணங்களும், கருத்துக்களும் மிக்ஸ் ஆகிவிட்டன...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-ஆக-202104:30:43 IST Report Abuse
NicoleThomsonபிட்டு பேப்பர் மாபியா மீடியாவை பார்த்து வளர்ந்தவர் போல...
Rate this:
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
14-ஆக-202106:53:31 IST Report Abuse
மு. செந்தமிழன்கடந்த 50 வருஷத்தில் நாட்டையே குட்டிசுவராக்கிவிட்டான் காங்கிரஸ்காரன்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202119:03:32 IST Report Abuse
J.V. Iyer சீனாவுக்கு போகாதீங்க தீபா சினிமாவுக்கு வாங்க நீங்க அடுத்த ஸ்ரீதேவிதான்.
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
06-ஜூலை-202109:30:40 IST Report Abuse
Saiசீனாவுக்குப்போய் படிக்க வேண்டிய காட்டாயம் ஏற்பட்டதேன்னு கேட்கலியே யோசிக்கலையே முதலில் படிப்பை முடிக்கட்டும் சினிமாவுல சீக்கு வந்தா உதவும்...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
06-ஜூலை-202112:00:03 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\சீனாவுக்குப்போய் படிக்க வேண்டிய காட்டாயம் ஏற்பட்டதேன்னு கேட்கலியே யோசிக்கலையே .....\\ ..... அதான் அவங்களே சொல்லிட்டாங்களே, "மெரிட்லே சீட் கிடைக்கலேன்னு ......." அதுக்கு காரணம் உங்களுக்குமே தெரிந்திருக்குமே ..... அதை திருப்பியும் சொல்லணுமா ? சமூக நீதி காவலர்கள் கோவித்துக்கொள்வார்கள்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜூலை-202115:28:43 IST Report Abuse
Bhaskaran ஏற்கனவே ஒரு செவிலியர் ஜூலி காலை சேவை செய்து வருவது போதாதா .இப்போ மருத்துவர் தீபாவும் தொடரணுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X