கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இளைஞர் மறுநாள் மூச்சுத்திணறலால் மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இளைஞர் மறுநாள் மூச்சுத்திணறலால் மரணம்

Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (8)
Share
மதுரை : மதுரை புதுவிளாங்குடி துளசி வீதியைச் சேர்ந்த 29 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஆண்ட்ரூ சைமன், நேற்று முன்தினம் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட நிலையில் நேற்று காலை மூச்சுத்திணறலால் இறந்தார். இதற்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தெரிவித்தார்.தேவகுமார் மகன் ஆண்ட்ரூ சைமன் இங்கிலாந்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இளைஞர்  மறுநாள் மூச்சுத்திணறலால் மரணம்

மதுரை : மதுரை புதுவிளாங்குடி துளசி வீதியைச் சேர்ந்த 29 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஆண்ட்ரூ சைமன், நேற்று முன்தினம் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட நிலையில் நேற்று காலை மூச்சுத்திணறலால் இறந்தார். இதற்கு தடுப்பூசி காரணம் அல்ல என்று சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தெரிவித்தார்.

தேவகுமார் மகன் ஆண்ட்ரூ சைமன் இங்கிலாந்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கொரோனா முதல் அலையின் போது இங்கிலாந்தில் இருந்து ஆக.,20 ல் பெங்களூரு வந்தார்.சளி பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் வந்ததால் மதுரை வந்து வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

நேற்று முன் தினம் வீட்டருகே உள்ள சமயநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரும் மனைவியும் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தினர். நேற்று காலை 8:30 மணிக்கு குளியலறை சென்ற ஆண்ட்ரூ சைமன் மூச்சுதிணறல் ஏற்பட்டு முனங்கினார். வீட்டினர் வந்து பார்த்தபோது மயங்கி சரிந்தார்.மதுரை அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு காலை 10:45 மணிக்கு கொண்டு வந்த போது ஆண்ட்ரூ சைமன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பரிசோதனைக்காக மார்ச்சுவரி கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறியதாவது:

சமயநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்ட்ரூ சைமன், அவரது மனைவி உட்பட 150 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர். மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை விசாரித்து அறிந்தோம். தடுப்பூசி போட்டதால் இவர் இறக்கவில்லை. இறந்தவருக்கு ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை, டி.பி. போன்ற நோய்கள் எதுவும் இல்லை. உணவு, மருந்து அலர்ஜி இதுவரை இருந்ததில்லை.சிகரெட், குடிப்பழக்கமும் இல்லை. இவருக்கு சர்க்கரை நோய் ஆறு மாதமாக இருந்தநிலையில் அதற்குரிய சிகிச்சை பெறாமல் இருந்ததாக அறிந்தோம். உடற்கூறு பரிசோதனைக்கு பின்பே உண்மையான காரணம் தெரியவரும் என்றார்.

மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறியதாவது:

பிரேத பரிசோதனையில் தீவிர மாரடைப்பு இருந்தால் கண்டறியலாம். சிறிய அளவில் என்றால் தெரியாது. மூச்சுதிணறல் மரணம், விஷமருந்தி மரணம் போன்றவற்றுக்கு தடயவியல் ஆய்வகத்திற்கு உடலுறுப்புகள் அனுப்பப்படும்.அங்கு நுட்பமான விஷயங்கள் ஆராய்ந்து இறப்புக்கான காரணம் கண்டறியப்படும். அரசு மருத்துவக் கல்லுாரி அருகில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு உறுப்புகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் தெரிய ஒரு வாரமாகும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X