உறவினர்களுடன் மொபைலில் பேச்சு: பெண்களை கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்

Updated : ஜூலை 04, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
போபால்: உறவினர்களுடன் மொபைலில் பேசியதற்காக இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கிய, தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.ம.பி., மாநிலம் பிபல்வா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் உறவினர்களான இரண்டு பழங்குடியின இளம்பெண்கள், தங்களது உறவினர்களுடன் மொபைல்போனில் பேசியுள்ளனர். இதனால், கோபமடைந்த ஒரு பெண்ணின் தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து ,
Madhya Pradesh Shocker, Camera, Women, Beaten,Sticks , Family

போபால்: உறவினர்களுடன் மொபைலில் பேசியதற்காக இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கிய, தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ம.பி., மாநிலம் பிபல்வா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் உறவினர்களான இரண்டு பழங்குடியின இளம்பெண்கள், தங்களது உறவினர்களுடன் மொபைல்போனில் பேசியுள்ளனர். இதனால், கோபமடைந்த ஒரு பெண்ணின் தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து , அங்கிருந்த அற்றங்கரையோரம், அப்பெண்களை கடுமையாக தாக்கினர். அவர்களுடன் தப்பித்து ஓட முயன்ற போதும், கீழே தள்ளிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.


latest tamil news


குச்சியை வைத்து கடுமையாக அடித்ததுடன், கைகளாலும் அறைந்தனர். தலைமுடியை பிடித்து இழுத்து சென்றதுடன், செருப்பாலும் பெண்ணின் தாயார் அடித்துள்ளார். கால் மூலமும் உதைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 22ம் தேதி நடந்துள்ளது. இதனை அங்கிருந்த சிலர், தங்களது மொபைலில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.வலியால், அப்பெண்கள் அலறி துடித்த போதும், ஒருவர் கூட, உதவ முன்வரவில்லை.

இந்த வீடியோ போலீசாரின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஒரு பெண்ணின் தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
05-ஜூலை-202104:00:42 IST Report Abuse
மதுரை விருமாண்டி சனாதனத்தில இதை சரின்னு தான் சொல்லியிருக்கு. சரி தானே சங்கிபாய்ஸ?
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூலை-202110:53:12 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyanதல புராணம் , ஜெய் ஹிந் புறம் , அப்துல் kkaதர் , முதலில் உன் மார்க்கத்தில் உள்ள பெண்ணடிமை யை சரி பன்னு .. கவர் போட்டு வைத்துள்ள உன் பெண்களை விடுவி , தொழுகைக்கு மசூதிக்கு அழைத்து போ .. ஹிந்து வை சீண்டாமல் இருக்க கத்துக்கொள் , இது ஒரு குடும்ப பிரச்னை ..ஹிந்து மததை இழுக்காதே .....
Rate this:
தமிழ் பசங்க - Salem,இந்தியா
07-ஜூலை-202111:06:13 IST Report Abuse
தமிழ் பசங்கபழங்குடியினர் உங்கள் கருத்துப்படி சனாதனியா..... ஆனால் சனாதன கருத்துப்படி.... இந்து, முஸ்லீம், கிருத்துவ ஜைன நாத்தீகர் என அனைவரும் சனாதனிகளே... அதாவது புராதானமானவர்கள்... மிகப் பழமையானவர்கள்......
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-ஜூலை-202102:47:03 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நீங்க போட்டுள்ள படத்தின் படி அந்த பெண்களும் சமமாக தாக்குகிறார்கள்?
Rate this:
Cancel
su naran - Montreal,கனடா
05-ஜூலை-202102:17:45 IST Report Abuse
su naran உதவி செய்யாமல் வீடியோ எடுத்தவர்களையும் தண்டிக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X