மேகதாது அணை திட்டத்தை ஏற்க இயலாது: முதல்வர் ஸ்டாலின் பதில்

Updated : ஜூலை 04, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: கர்நாடக அரசு, மேகதாது அணைக் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் எனவும், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்பதால்
மேகதாது அணை, முதல்வர், ஸ்டாலின், கடிதம், எடியூரப்பா, கர்நாடகா

சென்னை: கர்நாடக அரசு, மேகதாது அணைக் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் எனவும், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:


latest tamil news


மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. எனவே, பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. மேகதாது அணைக் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. தமிழகம் - கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-202119:00:06 IST Report Abuse
rajan வேண்டாம் விடுங்க.கோதாவரி காவேரி இணைப்பு வரைவு திட்டம் என்னாயிற்று.
Rate this:
Cancel
Harsha Jack - Tamilnadu,இந்தியா
04-ஜூலை-202122:41:36 IST Report Abuse
Harsha Jack மேகதாது அணையை திருட்டுத்தனமாக கட்ட முடியாததால் சம்மதம் கேட்கிறார்களோ?
Rate this:
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூலை-202121:25:28 IST Report Abuse
Raja You (Dmk) and Admk keep on writing letters, karnataka already built one dam near kgf / Krishnagiri during corona lockdown periods without permission. whoever comes as a ruling party only know to write letter no action . Just for name sake to fool TN people, because they only vote for either Dmk or Admk.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X