உ.பி., உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சிகள் கலக்கம்!

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் தொகுதிகளில் அந்தக் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன; இவற்றால், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, அக்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி
UP local Body Polls, Big Win, BJP, Congress

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் தொகுதிகளில் அந்தக் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன; இவற்றால், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, அக்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 75 மாவட்டங்களுக்கான பஞ்சாயத்து தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், 67 இடங்களை பா.ஜ., கைப்பற்றியது.அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இந்த தேர்தல் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


எச்சரிக்கை


இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்., தலைவர் சோனியாவின் லோக்சபா தொகுதியான ரேபரேலியில், அக்கட்சி வேட்பாளர் தோல்விஅடைந்து உள்ளார். அதேபோல் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் கோட்டையான மெயின்புரியில், அவரது கட்சி தோல்விஅடைந்துள்ளது.இவர்களது சொந்த லோக்சபா தொகுதியிலேயே, அவர்களுடைய கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளது, அக் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ரேபரேலி தொகுதியின் நீண்ட கால எம்.பி.,யாக சோனியா உள்ளார். மெயின்புரியில் 30 ஆண்டுகளாக, பஞ்சாயத்து தேர்தல்களில் சமாஜ்வாதி மட்டுமே வென்று வந்து உள்ளது.காங்., முன்னாள் தலைவர் ராகுல் முன்பு வெற்றி பெற்ற தொகுதியான அமேதியிலும், காங்., தோல்வியை சந்தித்துள்ளது.ரேபரேலி மற்றும் அமேதியில், பா.ஜ., முதல் முறையாக வென்றுள்ளது.ரேபரேலியில் முன்னாள் மேலவை உறுப்பினரான தினேஷ் சிங், காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.


பிரச்னைகளுக்கு தீர்வு

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், சோனியாவுக்கு எதிராக நிறுத்தப்பட்டார். அவருடைய சகோதரர் அவதேஷ் சிங், 2016ல் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வென்றவர். இவர்கள் பா.ஜ.,வின் வெற்றியை விட, காங்., தோல்விக்காக அதிக முயற்சிகள் எடுத்ததாக கூறப்படுகிறது.சமாஜ்வாதி கட்சியிலும், குடும்பத்திலும் குழப்பம் உள்ளது. அதுவே, அந்தக் கட்சிக்கு தொடர் தோல்விகளை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்குள், பிரச்னைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை, காங்., மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.சட்டசபை தேர்தலுக்கு புதிய உற்சாகத்துடன் காங்கிரசும், சமாஜ்வாதியும் தயாராகி வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தோல்வி, அந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே, சட்ட சபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியினர், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் நேற்று பேச்சு நடத்தினர்.


சவாலுக்கு தயார்!

உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், அசாதுதீன் ஓவைசியின் கட்சியினர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களது சவாலை ஏற்க தயாராக உள்ளோம். அடுத்த தேர்தலில், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்.

- யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,


சாய்னா நெஹ்வால் பாராட்டு

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு, பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இது தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டார்.இதற்கு, ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'மக்கள் தீர்ப்பை நசுக்கும் பா.ஜ.,வின் திறமைக்கு சாய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். இவரைப் போன்ற பிரபலங்களின் வார்த்தைகளில் மக்கள் மயங்கிவிடக் கூடாது' என, அவர் கூறியுள்ளார்.


கூட்டணி இல்லை காங்., புது திட்டம்

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், காங்.,குடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளன. இது குறித்து, மாநில காங்., தலைவர் அஜய் குமார் லல்லு கூறியுள்ளதாவது:யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு, ஆட்சி அமைக்கும் திறன், வலிமை காங்.,குக்கு உள்ளது.

காங்., தலைவர் சோனியாவின் மகளும், பொதுச் செயலருமான பிரியங்காவின் மேற்பார்வையில், காங்., தனியாக போட்டியிட்டு வெல்லும்.சமாஜ்வாதி கட்சிக்கு 49 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன் சிறந்த எதிர்க்கட்சியாக காங்., தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது, மாநிலத்தில் பெரும் புயல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தப் புயல் தான் பிரியங்கா. மாநில மக்கள், காங்., மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
07-ஜூலை-202114:35:20 IST Report Abuse
INDIAN Kumar நான்காவது இடம் கிடைத்தால் அது இத்தாலி காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றி.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
07-ஜூலை-202114:33:58 IST Report Abuse
INDIAN Kumar இத்தாலி குரூப் வெளியேறினால் காங்கிரஸ் பிழைக்கும் இல்லை என்றால் மெல்ல மெல்ல _________
Rate this:
Cancel
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202120:37:04 IST Report Abuse
Seitheee ஒரு கட்சி தலைவரை தேர்தெடுக்க வக்கில்லாத கட்சி காங்கிரஸ். குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதை அவர்கள் கொள்கையாக வைத்துக்கொண்டிருக்கும் வரை, அந்த கட்சி உருப்படாது. திரும்ப திரும்ப ஒரு மன முதிர்ச்சி இல்லாத ஒரு ராகுல் காந்தியை வைத்து கட்சியை ஓ ட்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் நினைப்பது, அவர்களின் அடிமை மனப்பான்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது கொஞ்சமும் புத்திசாலித்தனம் இல்லாத ஒரு நபரின் கீழ்தான் செயல்படுவோம் என்று பிடிவாதம் பிடித்தால் கட்சி உருப்படாமல் போகும். இதுவரை அவர் பேச்சு எதிலும் அவர் BJP யின் ஒரு கீழ்மட்ட தலைவரின் பேச்சுக்கு இணையாக கூட இல்லாதது காங்கிரஸ் கட்சி வருத்தப்பட வேண்டிய விஷயம். இந்திரா காந்தி இருந்தபோது இவ்வளவு கேவலப்பட்டதில்லை. காங்கிரஸ் ஓர் வலுவான எதிர் கட்சியாக இருந்தல் அது நாட்டிற்கு நல்லது. ஆனால் அது நடக்கப்போவதில்லை. கட்சியை குழி தோண்டி புதைத்துவிட்டு நேரு குடும்பம் வேறு வேலை பார்க்கும் போல இருக்கிறது. குடும்பம் சாரதா ஒருவர் கட்சி தலைவர வந்து கட்சியை சீரமைக்க வேண்டும். இப்பொழுது உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் ஓய்வு கொடுத்து அனுப்பவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X