பொது செய்தி

இந்தியா

இரண்டு 'டோஸ்' போதாது: புதிய ஆய்வில் தகவல்

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி:ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி எடுத்துக் கொண்டோரில், 16.1 சதவீதம் பேரின் உடலில், வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.அறிக்கைஅதனால், மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியம் என்பது தெரிய வந்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானிகள் நடத்திய
Corona Vaccine, Covid Vaccine, Vaccine

புதுடில்லி:ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி எடுத்துக் கொண்டோரில், 16.1 சதவீதம் பேரின் உடலில், வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.


அறிக்கை

அதனால், மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியம் என்பது தெரிய வந்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தப்பட்டோரிடம் ஆய்வு செய்யப் பட்டது. அதன்படி ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டோரில், 58.1 சதவீதம் பேரிடம், தற்போது பரவி வரும், 'பி1.617.2' எனப்படும், டெல்டா வகை வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை.அதே நேரத்தில் இரண்டு டோஸ் எடுத்தவர்களில், 16.1 சதவீதம் பேரிடம், நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. அதாவது இவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும்.


மூன்றாவது டோஸ்அது, மற்ற நோய்களில் இருந்து அவர்களை காப்பாற்றும். இருப்பினும் முழுமையான பலன், பாதுகாப்பு பெறுவதற்கு, மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்ததாக இருக்கும்.அதே நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன்பின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானதாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
10-ஜூலை-202115:03:25 IST Report Abuse
INDIAN Kumar USER NAME MUST BE SHORTER AND DECENT- COORDINATOR
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-ஜூலை-202120:42:57 IST Report Abuse
Sivagiri கொசுபத்தி / கரப்பான் பூச்சி மருந்து - விளம்பரம் போல - இனிமேல் மாசா மாசம் உங்களது பட்ஜெட்டில் தடுப்பூசியும் சேர்த்துக்கோங்க இல்லத்தரசர்களே - என்று விளம்பரம் வரும் போல . . .
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-ஜூலை-202121:54:33 IST Report Abuse
Visu Iyerஅப்போ வருமானம் குறையுமா.. கூடுமா.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகமாகும்.. அது சரி.. நீங்க மத்தியிலா...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-ஜூலை-202120:30:55 IST Report Abuse
M  Ramachandran ஏன் குழப்பு கிறார்கள். சரியாக ஆய்வு மேற்கொள்வதில் ஏதாதாவது உங்களை தடுக்கிறதா? உங்களை நம்பி மக்கள் முந்தி அடித்து தடுப்பூசி ஊசி போர்த்துகொண்டாள் பகீர் செய்திகளை பரப்புகிறீர்களே. பேசாமல் வெளி நாட்டினார் தடுப்பு ஊசியை கொள்முதல் செய்து மக்களுக்கு போடலாமே?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-ஜூலை-202121:55:57 IST Report Abuse
Visu Iyerஇப்படி சொல்வது அதுக்கு தானே. என்று இன்னுமா புரியவில்லை உங்களுக்காக இந்த பாடலை பகிர்ந்து கொள்கிறேன்..////இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X