ரபேல் முறைகேடு விவகாரத்தில் பா.ஜ., மவுனம் காப்பது ஏன்?

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 04, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி:''ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் தயங்குவது ஏன்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பிஉள்ளார்.இந்திய விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல்
ரபேல் முறைகேடு விவகாரத்தில் பா.ஜ., மவுனம் காப்பது ஏன்?

புதுடில்லி:''ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் தயங்குவது ஏன்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பிஉள்ளார்.

இந்திய விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட, 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.'ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதற்கிடையே, 'இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிலருக்கு சாதகமாக நடந்து கொள்ளப்பட்டது குறித்தும்,ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்தும், பிரான்சின் பி.என்.எப்., எனப்படும் தேசிய நிதி நடவடிக்கை அலுவலகம் விசாரணையை துவங்கியுள்ளது' என, பிரான்ஸ் ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதற்காக தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை துவங்கிஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 'டுவிட்டரில்' இந்த விவகாரம் குறித்து காங்., தலைவர் ராகுல் பதிவிட்டு >
உள்ளதாவது: ரபேல் முறைகேடு தொடர்பாக, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயங்குவது ஏன்? குற்ற உணர்வா அல்லது நண்பர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயமா என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேடா கூறுகையில், ''ரபேல் ஒப்பந்தம், இந்தியா - பிரான்ஸ் இடையே ஏற்பட்டது, இதில் நடந்த முறைகேடு குறித்து, பிரான்ஸ் விசாரணையை துவக்கி விட்டது. ஆனால், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202119:12:29 IST Report Abuse
J.V. Iyer காங்கிரஸ் மீதுள்ள பழைய புகாரை எல்லாம் தூசுதட்டி எடுங்கள். ரொம்பத்தான் ஆடுகிறார்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-ஜூலை-202114:13:30 IST Report Abuse
Sivagiri விவகாரம் மட்டுமே உள்ளது முறைகேடு இல்லை - என்று நீதிமன்றம் சொல்லி vittathe
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஜூலை-202113:57:03 IST Report Abuse
தமிழவேல் அவர்கள் முடிவை அறிவித்த பின்பு பப்பு கொதிக்கலாமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X