* மத்திய அமைச்சரவையில் 81 பேர் இடம் பெறலாம். தற்போது 53 பேர் மட்டுமே உள்ளனர். 28 இடங்கள் காலியாக உள்ளன.
* மத்திய அமைச்சரவையில் தற்போது இடம் பெற்றிருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஆண்கள். 53 சதவீதம் பேர் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்கள், 9 பேர் உ.பி., 7 பேர் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள். விரிவாக்கத்தின் போது அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநித்துவம் கொடுக்கப்படும்.
* அமைச்சரவையில் 20 மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக செயல்படாத 3 அமைச்சர்கள் நீக்கப்படலாம். கொரோனா காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இவருக்கு பதிலாக டில்லியை சேர்ந்த எம்.பி., மீனாட்சி லேக்கி வாய்ப்பு பெறலாம்.

* புதிதாக ஜோதிராதித்யா சிந்தியா, வருண் காந்தி, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனவால், பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, மகாராஷ்டிராவின் நாராயண் ரானே, பிரித்தம் கோபிநாத் இடம் பெறலாம்.
* ரவி சங்கர் பிரசாத், பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவ்டேகர் உட்பட சில மூத்த அமைச்சர்களிடம் நான்கு இலாகாக்கள் உள்ளன. இவர்களது சுமையை குறைக்கும் வகையில் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படலாம்.
* அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஹரியானா, கர்நாடகா, மேற்குவங்கத்தை சேர்ந்தவர்களும் வாய்ப்பு பெறலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE