அரசியல் செய்தி

தமிழ்நாடு

1,500 கிலோ ஆவின் இனிப்புகள்; அள்ளி சென்ற ராஜேந்திர பாலாஜி!

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சேலம் : ''அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளியின் போது, 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை,'' என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.சேலத்தில் ஆவின் விற்பனை, பொருட்களின் தரம் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு செய்தார். ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் பணி பாதுகாப்பு
Rajenthra Bhalaji, Aavin, Aavin Sweets

சேலம் : ''அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளியின் போது, 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை,'' என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.

சேலத்தில் ஆவின் விற்பனை, பொருட்களின் தரம் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு செய்தார். ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் பணி பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.


latest tamil news



அவர் அளித்த பேட்டி: ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், பால் விற்பனை, 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. ஆவினில் புரோக்கர்கள் வாயிலாக தவறான முறையில், இளநிலை அந்தஸ்தில், 234 பேர், 460 பணியாளர்கள் நியமித்தது குறித்து விசாரணை நடக்கிறது.

மேலாளர் தகுதியில், 174 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 25 ஆவின் ஒன்றியங்களிலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம், தேனி, மதுரையில் பெரிய அளவில் நடந்துள்ளது.

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளியின் போது, 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை. ஆதாரம் இருப்பதால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பணி காலத்தில் இறந்த ஆவின் ஊழியர்களின் வாரிசுகள், 48 பேருக்கு, விரைவில் கருணை பணி வழங்கப்படும்.இவ்வாறு, நாசர் கூறினார்.


'தனிமையில் மாஜி'


அமைச்சர் நாசரின் குற்றச்சாட்டு குறித்து கேட்க, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது இரண்டு அலைபேசிகளுமே, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தன. அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்ததில், கொரோனா தொற்றில் இருந்து குணமாகி, தற்போது சென்னையில் தனிமையில் இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
10-ஜூலை-202105:32:33 IST Report Abuse
meenakshisundaram இந்த செயதி உண்மையா ?கேட்க 'கசப்பா ' இருக்கே ?
Rate this:
Cancel
APJ - Madurai,இந்தியா
09-ஜூலை-202122:54:02 IST Report Abuse
APJ டாடியின் மகனுக்கு இந்த உரிமை கூட இல்லையா ..ஐயகோ .............
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-ஜூலை-202120:28:19 IST Report Abuse
Sivagiri ஐயோ பாவம் - பொதுப்பணி என்றால் மணல் சிமிண்டு ரோடு பாலம் / மெடிக்கல் என்றால் மருந்து ஊசி மெடிக்கல் சீட்டு / கனிம வளம் என்றால் மணல் , நிலக்கரி , மெட்டல் , பள்ளி கல்வி என்றால் நோட்டு புக் யூனிபார்ம் , காவல் என்றால் மேற்படி வசூல் - இப்டி துறைகளுக்கு தகுந்தாற்போல அடிக்கிறதுதான் - பாலில் இருந்து பால்கோவாதான் கிடைத்தது போல - சுகர் இருந்தா தானும் திங்க முடியாதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X