இஸ்லாமியர் வளர குடும்பக் கட்டுப்பாடுதான் ஒரே வழி- அசாம் முதல்வர்

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (28) | |
Advertisement
கவுஹாத்தி: அசாமில் ஹிம்மந்த் பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜ., ஆட்சி நடைபெறுகிறது. அசாமில் இஸ்லாமியர்கள், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு நீண்டகால முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்போதுதான் இவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு, சலுகைகள், இன்ன பிற அரசு ஆதாயங்களை வழங்க

கவுஹாத்தி: அசாமில் ஹிம்மந்த் பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜ., ஆட்சி நடைபெறுகிறது. அசாமில் இஸ்லாமியர்கள், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு நீண்டகால முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்போதுதான் இவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு இடஒதுக்கீடு, சலுகைகள், இன்ன பிற அரசு ஆதாயங்களை வழங்க முடியும்.latest tamil news


மக்கள் நலம் கருதியே மக்களது பூர்வீகம் மற்றும் மதம் தொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதாக முதல்வர் ஷர்மா தெரிவித்துள்ளார். இவர்களுள் குறிப்பாக இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அவர்களது மதத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க முதல்வர் விரும்பினார். இதனை அடுத்து அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய குழுக்களுக்கு தலைமை வகிக்கும் 150 முக்கியஸ்தர்களுடன் முதல்வர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

சிறுபான்மையினர் நலனுக்காக அரசு ஏற்படுத்தியிருக்கும் நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் விவரித்த முதல்வர் ஷர்மா, அசாம் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார். இதனாலேயே மாநில மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும், மேலும் மாநிலம் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் என்றார்.

வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் அசாம் மாநில பாஜ.,வினரால் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறது. முதல்வருடனான முதல்கட்ட இஸ்லாமிய முக்கியஸ்தர்கள் சந்திப்பில் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் அழைக்கப்படவில்லை. அசாம் மக்கள் தொகையில் 35 சதவீத மக்கள் இஸ்லாமியர்களாவர். இவர்களில் 30 சதவீதம்பேர் வங்காள மொழி பேசுபவர்கள். மீதம் ஐந்து சதவீதம்பேர் அசாம் மொழி பேசுபவர்கள்.

குறைந்த வருவாய் கொண்ட கிழக்கிந்திய மாநிலம் என்று முத்திரை குத்தப்படும் அசாமில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இந்த சந்திப்பு உதவியதாக ஷர்மா தெரிவித்துள்ளார். இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையின்போது வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்களது ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil news


அசாமில் உள்ள இஸ்லாமியர்களின் சுகாதாரம், கல்வித்தரம், மக்கள் தொகை கட்டுப்பாடு, கலாச்சார மேம்பாடு, பொருளாதார மற்றும் அறிவுசார் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த பாஜ., அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என முதல்வர் சர்மா உறுதி அளித்தார்.

இவர்களுடனான இந்த கூட்டத்தின் முடிவை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் பத்திரிகைகள் பார்வைக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்கிற மாநில குடும்பக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றே இஸ்லாமியர்களின் கல்வித்தரம், வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும். ஆகவே அனைத்து அசாம் மாநில இஸ்லாமியர்களும் இச்சட்டத்தை மதித்து அதனைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Raman - Coimbatore,இந்தியா
05-ஜூலை-202119:54:06 IST Report Abuse
Senthil Raman பத்து மனைவிகளுக்கும் சேர்த்து இரண்டு குழந்தைகளா அல்லது ஒவ்வொரு மனைவியிடமும் இரண்டு இரண்டு குழந்தைகளா, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் முதல்வரே...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202118:58:49 IST Report Abuse
J.V. Iyer ஒரு சஞ்சய் காந்தி மீண்டும் வரவேண்டும்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-ஜூலை-202116:05:20 IST Report Abuse
Loganathan Kuttuva குடும்ப கட்டுப்பாடு திட்டம் இந்திரா காலத்தில் கடுமையாக பின்பற்றப்பட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X