சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று கலந்துகொண்டார்.
தேமுதிக ஆர்பாட்டம்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு எதிராக தே.மு.தி.க சார்பில் தமிழத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ம் தேதி அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று (ஜூலை 5) பல்வேறு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டார். முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், சைக்கிள் ஓட்டி போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார் பிரேமலதா. கோவிட் காலம் என்பதால் சைக்கிள் பயணமாக கூட்டமாக செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்திய நிலையில் பிரேமலதா சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் சைக்களில் சென்றபோது கட்சி நிர்வாகிகள் அவரது சைக்கிள் பின்னாடியே ஓடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE