பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்: ஓவைசி விமர்சனம்

Updated : ஜூலை 05, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (43)
Advertisement
புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது எனக் கூறியுள்ளா். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என, இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி காட்டமாக விமர்சித்து

புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது எனக் கூறியுள்ளா். ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என, இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி காட்டமாக விமர்சித்து உள்ளார்.



latest tamil news



உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எனும் நூல் வெளியிட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்று பேசுகையில், 'இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கக்கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால், வெறுப்பைக் காட்டினால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடக்கும்போது, பெரும்பான்மை மக்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் குரல் எழ வேண்டும். பசு புனிதமான விலங்கு. ஆனால், சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது' என்றார்.


latest tamil news



இதற்கு பதில் தெரிவித்து, அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.,) தலைவர் அசாசுதீன் ஓவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பாகவத், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவிற்கு எதிரானது எனக் கூறுகிறார். ஆனால் இந்த கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று மடடும் தெரிகிறது. இவ்வாறு ஒவைசி பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
06-ஜூலை-202107:05:42 IST Report Abuse
agni அனைவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது தெய்விக தன்மை கொண்ட நம் மண்ணின் நாட்டு மாடுகளை தான் பசு என்று அக்காலத்தில் ஹிந்துக்கள் பெயரிட்டு அழைத்தார்கள்.சீமை மாடுகளுக்கு பசு என்ற சொல் பொருந்தாது.
Rate this:
Cancel
Ayappan - chennai,இந்தியா
05-ஜூலை-202123:07:37 IST Report Abuse
Ayappan Cow is our traditional God
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
05-ஜூலை-202122:33:02 IST Report Abuse
J.Isaac பசு புனிதமானது. ஆனால் எந்த பிரமாணரரும் வீட்டில் வளர்க்கமாட்டார்கள்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-ஜூலை-202106:14:18 IST Report Abuse
NicoleThomsonதவறு இசாக் அவர்களே கிராமங்களில் வந்து பாருங்க பெங்களூரில் தானே இருக்கிறீர்கள் அப்படியே எங்க சிக்கநாயக்கனஹள்ளி ஹீப்புரூ வந்து பாருங்க நாங்களும் பசு வளர்க்கிறோம் , பக்கத்து வயல்காரவுங்க நீங்க சொன்னவர்களும் பசு வளர்க்கிறார்கள் , அவர்களின் பசு பால் நிறுத்து வறட்டு மாடு ஆகிவிட்டது ஆனாலும் வைத்து கொண்டுள்ளார்கள்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-ஜூலை-202106:15:36 IST Report Abuse
NicoleThomsonநல்ல வேலை மோகன் எருமை யார் பன்றி யார் என்றும் கூறாமல் விட்டுவிட்டார் குறுந்தாடி வைத்தவனெல்லாம் பன்றியாக முடியுமா?...
Rate this:
muthu - tirunelveli,இந்தியா
06-ஜூலை-202106:38:13 IST Report Abuse
muthuGETTING FOOD FOR COW FROM FOREST IS NOT EASY ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X